Latestமலேசியா

மாணவரிடம் ‘பாலியல் சேட்டை’ புரிந்தது உண்மையென்றால், ஆசிரியைக்கு தண்டனை நிச்சயம் ; கூறுகிறார் கல்வி அமைச்சர்

கிள்ளான், மார்ச் 26 – ஆண் மாணவருடன், ஆசிரியர் ஒருவர் “காதல் லீலையில்” ஈடுபட்டது உண்மையென விசாரணையில் தெரிய வந்தால், அவருக்கு எதிராக கல்வி அமைச்சு கட்டாயம் நடவடிக்கை எடுக்கும்.

தற்சமயம், விசாரணை முடியும் வரை, சம்பந்தப்பட்ட ஆசிரியை, மாணவர்களை தொடர்புக் கொள்ள அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக, கல்வி அமைச்சர் பட்லிமா சிடேக் தெரிவித்தார்.

போலீஸ் விசாரணை முடிவுக்கு வந்த பின்னர்,சம்பந்தப்பட்ட ஆசிரியருக்கு எதிராக கல்வி அமைச்சு நடவடிக்கை எடுக்கும்.

எனினும், அதுவரை நிர்ணயிக்கப்பட்ட விதிமுறைகளை கல்வி அமைச்சு பின்பற்றி வருவதாக, பட்லினா சொன்னார்.

அதே சமயம், அச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட ஆண் மாணவருக்கு தேவையான உளவியல் ஆலோசனைகளும், வழிகாட்டுதல்களும் வழங்கப்படும் என்றாரவர்.

ஆண் மாணவரிடம், பாலியல் சேட்டை புரிந்த 37 வயது ஆசிரியையின் வாக்குமூலம் பதிவுச் செய்யப்பட்டுள்ளதாக, நேற்று செப்பாங் போலீஸ் தலைவர் ACP வான் கமருல் அஜ்ரான் வான் யூசோப் கூறியிருந்தார்.

பள்ளி நூலகத்தில் ல், தனது மகனிடம் சம்பந்தப்பட்ட ஆசிரியை பாலியல் சேட்டை புரிந்ததாக, கடந்தாண்டு டிசம்பர் 12-ஆம் தேதி, அம்மாணவரின் தாயார் போலீஸ் புகார் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!