Latestமலேசியா

கெந்திங்கில் 2 சூதாட்ட விடுதிகள் மூடப்பட்டன

கோலாலம்பூர், பிப் 28 – கெந்திங் மலையில் இரண்டு சூதாட்ட விடுதிகள் இன்று முதல் மூடப்பட்டதை தொடர்ந்து பிரபல சூதாட்ட மையம் என்ற கெந்திங் மலையின் அடையாளம் ஒரு முடிவுக்கு வருகிறது. தற்போது கெந்திங் மலையில் SkyCasino சூதாட்ட விடுதி மட்டுமே செயல்படும். இன்று முதல் கெந்திங் கெசினோ 1 (CIrcus Palace ) மற்றும் Genting Casino (Hollywood) மூடப்படுவதாக Resort World Genting நிறுவனத்தின் அகப்பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சூதாட்ட ஆர்வலர்கள் புதிய மற்றும் மேலும் நவீனமயத்தை கொண்டுள்ள SkyCasino வில் சூதாட்ட நடவடிக்கைகளில் பங்கேற்க முடியும் என அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. அந்த இரண்டு சூதாட்ட நிலையங்களும் மூடப்பட்டதற்கான காரணம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. எந்தவொரு தலையிடு இன்றி சுமூகமான பரிமாற்ற வசதிக்காக SkyAvenue வில் இருக்கும் SkyCasino வுக்கு செல்வதற்கு Shuttle சேவையும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக Resort World Genting தெரிவித்துள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!