Latestமலேசியா

RM10 மில்லியன் சுங்க வரி செலுத்தப்படாத 28 ஆடம்பர கார்கள் பறிமுதல்

கோலாலம்பூர், மார்ச் 4 – பேரா மற்றும்  சிலாங்கூரில் பல்வேறு இடங்களில்10 மில்லியன் ரிங்கிட்  சுங்க வரி செலுத்தப்படாத   28 ஆடம்பர  கார்களை சுங்கத்துறை பறிமுதல் செய்தது.  கடந்த ஜனவரி மற்றும்  பிப்ரவரி மாதம்   அவ்விரண்டு மாநிலங்களிலும் மேற்கொள்ளப்பட்ட  12 இடங்களில் அந்த கார்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக பேரா சுங்கத்துறை இயக்குனர் டத்தோ  Abdul   Ghafar Mohamad   தெரிவித்தார்.  அந்த வாகனங்கள்   சுங்கத்துறையின் பரிசோதனைக்கு உட்படுத்தப்படாமல்   பறிமுதல் செய்யப்பட்ட இடத்தில்  வைக்கப்பட்டிருந்தது.  Porsche,  Mercedes  மற்றும்  Lexus   ஆகிய கார்களும் பறிமுதல் செய்யப்பட்டதாக இன்று நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அவர்  கூறினார். 

இந்த வாகனங்களில் சில அனுமதிக்கப்பட்ட கிடங்கில் வைக்கப்பட்டிருந்தன. விசாரணைக்கு உதவியாக   40 மற்றும்  50 வயதுக்குட்பட்ட   11 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.  அவர்கள்  சம்பந்தப்பட்ட வாகன மற்றும் நிறுவனங்களின் உரிமையாளர்கள்  என நம்பப்படுகிறது. 1967 ஆம் ஆண்டு சுங்கத்துறை சட்டத்தின்  135 ஆவது விதியின் உட்பிரிவு (1)(d) செக்சன் 133 உட்பிரிவு (1)(a )மற்றும்  செக்சன் 138 ஆவது விதியின் கீழ் விசாரணை நடத்தப்பட்டு  வருவதாகவும்   Abdul Ghafar  தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!