Latestமலேசியா

#Reformasi100Peratus பேரணி ஏற்பாட்டாளர்களை போலீஸ் விசாரிக்கும்

கோலாலம்பூர், பிப்ரவரி-27 சட்ட சீர்திருத்தங்களை வலியுறுத்தி இன்று காலை நடத்தப்பட்ட #Reformasi100Peratus பேரணி ஏற்பாட்டாளர்களிடம் இருந்து, போலீசார் வாக்குமூலத்தைப் பதிவுச் செய்யவிருக்கின்றனர்.

நாடாளுமன்றக் கட்டடம் அருகே நடைப்பெற்ற அப்பேரணி குறித்த விசாரணைகளுக்காக அவ்வாறு செய்யப்படவிருப்பதாக டாங் வாங்கி போலீஸ் தலைவர் நூர் டெல்லா யாஹ்யா தெரிவித்தார். 2012 அமைதிப் பேரணி சட்டத்தின் கீழ் விசாரணை நடைபெறும் என்றார் அவர்.

100 விழுக்காடு சீர்திருத்தங்கள் என்ற வாக்குறுதியை ‘நினைவுறுத்தும்’ முயற்சியில், நாடாளுமன்றக் கட்டடத்தில் இருந்து வெறும் 900 மீட்டர் தொலைவில் இருக்கும் Tugu Negara-வில் இருந்து நாடாளுமன்றக் கட்டடத்தை நோக்கி இன்று காலை அப்பேரணி தொடங்கியது.

தேர்தல் சீர்திருத்தங்களை வலியுறுத்தும் BERSIH அமைப்பு அந்த அமைதிப் பேரணிக்கு ஏற்பாடு செய்திருந்தது; அதில் 50 முதல் 60 பேர் வரை பங்கேற்றிருக்கலாம் என கணிக்கப்படுகிறது.

நீதிமன்றக் குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவிக்காமல் விடுதலை செய்யும் DNNA முறையை எதிர்ப்பது, ஊழல் துடைத் தொழிப்பு உள்ளிட்டவை, அவர்கள் வலியுறுத்தும் 100 விழுக்காடு சீர்த்திருத்தங்களில் அடங்கும்.

பேரணியில் பங்கேற்பதற்காக காலை 7.30 மணிக்கெல்லாம் அவர்கள் Tugu Negaraவில் ஒன்று கூட, பாதுகாப்புக்காக போலீசார் பணியமர்த்தப்பட்டிருந்தனர்.

பேரணியின் முடிவில், அங்கு வந்த பக்காத்தான் MP-கள் உள்ளிட்ட 6 நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் அந்த 100 விழுக்காடு சீர்திருத்தக் கோரிக்கை மகஜர் சமர்ப்பிக்கப்பட்டது.

இப்போது எதிர்கட்சியில் இருக்கும் மூவார் நாடாளுமன்ற உறுப்பினர் Syed Saddiq Abdul Rahman-னும் மகஜரைப் பெற்றவர்களில் அடங்குவார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!