Latestஉலகம்

ஆஸ்திரேலியாவில், ‘அட்டகாசம்’ புரியும் அழகிய நீர்நாய்; இணையவாசிகளின் கவனத்தையும் ஈர்த்துள்ளது

சிட்னி, டிசம்பர் 22 – ஆஸ்திரேலியா, டாஸ்மானியாவில், தனது “அட்டகாசத்தால்” உள்ளூர் மக்களை கவர்ந்த “நீல்” எனும் நீர்நாய் ஒன்று தற்போது டிக் டொக் பயனர்களின் கவனத்தையும் வெகுவாக ஈர்த்துள்ளது.

600 கிலோகிராம் எடை கொண்ட நீல், அவ்வப்போது கடலுக்கு அருகிலுள்ள, டுனாலி உட்பட இதர சில நகர்களை வலம் வரும் காணொளி ஒன்று, இணையத்தில் வைரலாகியுள்ளது.

திறந்த வெளிகள் அல்லது குடியிருப்புப் பகுதிக்கு செல்லும் சாலையின் நடுவே படுத்து உறங்கும் பழக்கம் கொண்ட நீல், வாகனங்களுக்கு இடையூறாக உள்ளது.

பலர் அதனால் மாற்று பாதைகளை பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்படுவதோடு, அதனால் பல சமயங்களில் வேலைக்கு செல்வதில் கூட தாமதம் ஏற்படுவதாக, சிலர் பதிவிட்டுள்ளனர்.

எனினும் அந்த பதிவுகள், இதர இணையப் பயனர்களை சிரிக்க வைத்து மகிழ்ச்சிப்படுத்துவதாக கூறப்படுகிறது.

இவ்வேளையில், நீல் புகைப்படங்களையும், காணொளிகளையும் பகிர்ந்துள்ள மாணவர் ஒருவர், அது தொடர்பான கேள்விகளுக்கும் விடையளித்து வருகிறார்.

2020-ஆம் ஆண்டு, ஆஸ்திரேலியா, சேலம் விரிகுடாவில் பிறந்த நீல், நான்கு அல்லது ஐந்து வாரங்களுக்கு ஒரு முறை ஓய்வெடுக்க தரைக்கு திரும்பும்

அதுபோன்ற சமயங்களில், நீல் நகர் வலம் வருவதும் வழக்கமாகும்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!