Latestமலேசியா

வெளிநாட்டு திரைப்படங்கள்; ஒதுக்கீட்டை நிர்ணயிக்கும் திட்டம் எதுவும் இல்லை

கோலாலம்பூர், பிப்ரவரி 8 – நாட்டிலுள்ள திரையரங்குகளில், தற்சமயம் திரையிடப்படும் வெளிநாட்டு திரைப்படங்களின் நுழைவை கட்டுபடுத்தும் வகையில், அவற்றின் திரையீட்டு ஒதுக்கீட்டை நிர்ணயிக்கும் திட்டம் எதுவும், பினாஸ் (FINAS) தேசிய திரைப்பட மேம்பாட்டு வாரியத்திற்கு இல்லை.

நாட்டின் திரைப்படத் துறையின் தரத்தை மேம்படுத்துவதற்கான முயற்சிகளில் இப்போதைக்கு கவனம் செலுத்தப்பட வேண்டுமென, தகவல் தொடர்பு அமைச்சர் பாஹ்மி பட்சேல் தெரிவித்தார்.

வெளிநாடுகள் குறிப்பாக இந்தோனேசியாவிலிருந்து நாட்டிற்கு கொண்டு வரப்படும் அந்நிய திரைப்படங்களின் நுழைவுக் கட்டுப்பாடு குறித்து பாஹ்மி இவ்வாறு பதிலளித்தார்.

வெளிநாடுகளில் நடைமுறையில் இருக்கும் தயாரிப்பு ஒதுக்கீட்டை நிர்ணயிக்கும் உத்தேசம் உள்ளது.

அதனால், வெளிநாட்டிலிருந்து தருவிக்கப்படும் அல்லது வரும் திரைப்படங்களின் நுழைவுக்கு கட்டுப்பாட்டை விதிக்கும் உத்தேசம் தற்போதைக்கு இல்லை என பாஹ்மி சொன்னார்.

அதே சமயம், “ஆன்லைன்” சட்டவிரோத திரையீட்டு பிரச்சினைகளிலும், கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு வருவதையும் பாஹ்மி சுட்டிக்காட்டினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!