Latestமலேசியா

நான் யாரையும் குழப்பவில்லை ‘ஹலால்’ இல்லாத கடையில் வியாபாரம் செய்கிறேன்; சுரேஸ் கூறுகிறார்

கோலாலம்பூர், நவ 1 – நான் ஹலால் இல்லாத கடையில் வேலை செய்கிறேன். எனவே யாரையும் குழப்பவில்லை என்கிறார் டாமான்சாரா ஜெயாவில் ஹலால் அல்லாத நாசி லெமாக் மற்றும் நாசி கண்டார் அங்காடி கடையை நடத்திவரும் 38 வயதுடைய G. சுரேஷ் தெரிவித்திருக்கிறார். அவரது நாசி கண்டார் மற்றும் நாசி லெமாக் பன்றி இறைச்சியுடன் விற்கப்படுவது சமூக வலைத்தளங்களில் பரவியதைத் தொடர்ந்து அவர் இதனை தெரிவித்தார். தம்மைப் பொறுத்தவரை விற்கப்படும் நாசி கண்டார் மற்றும் நாசி லெமாக் பன்றி இறைச்சி ஒரு சிறப்பு உணவு என்பதோடு கடந்த மூன்று வாரங்களாக தாம் நடத்திவரும் வணிகத்தின் ப்ராண்ட் ‘Brand’ அல்லது அடையாளகமாகவும் இருப்பதாக சுரேஷ் கூறினார்.

இது எனது வியாபாரத்தில் மூன்றாவது வாரம். நேற்று வெளியான ஒரு கட்டுரை உட்பட இந்த விஷயம் வைரலானதை நான் கவனித்தேன். முன்பு ஒரு உணவகம் இருந்தது, அது மூடப்பட்டதால் ஒரு சீனருக்கு சொந்தமான கடையில் வாடகைக்கு அங்காடி கடையை எடுத்து வியாபாரம் செய்து வருவதாக அவர் தெரிவித்தார். இது ஹலால் இல்லாத கடை என்பதால், நான் ஹலால் இல்லாத சைட் டிஷ், பன்றி இறைச்சியை விற்கிறேன். எவரது மனதையும் புண்படுத்த விரும்பவிலலை என்றும் சுரேஷ் தெரிவித்தார். நான் இந்த உணவை ஒரு சீனர் கடையில் விற்கிறேன், குடியிருப்பு பகுதியில் அல்ல. மேலும் எனது வாடிக்கையாளர் முஸ்லிம் அல்ல என்றும் அவர் விவரித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!