Latestமலேசியா

முதன்மை தரவுத் தளமான PADU-வில் பதிவும் சரிபார்த்தலும் இனிமேலும் நீட்டிக்கப்படாது

ஷா அலாம், மார்ச் 31 – முதன்மை தரவுத் தளமான PADU வில் பதிவு மற்றும் சரிபார்ப்பது மார்ச் 31ஆம் தேதியோடு முடிவுக்கு வருவதால் அதன் பிறகு அந்நடவடிக்கை இனியும் நீட்டிக்கப்படாது. உதவித் தொகை மறுசீரமைப்புக்கான அமலாக்கத்தை திட்டமிட்ட காலத்திற்குள் தாங்கள் அவசியம் பின்பற்ற வேண்டியிருப்பதாக பொருளாதார அமைச்சர் Rafizi Ramli தெரிவித்திருக்கிறார். மார்ச் 31ஆம் தேதிக்கு பிறகு PADU வில் பதிவு மற்றும் சரிபார்க்கும் நடவடிக்கையை நீட்டிக்கும் திட்டத்தை நாங்கள் கொண்டிருக்கவில்லை என்பதை தாம் தெரிவிப்பதாக அவர் கூறினார்.

இவ்வாண்டு சிறிய மற்றும் பெரிய அளவிலான உதவித் தொகையை மறுசீரமைக்கும் நடவடிக்கையை நாங்கள் தொடங்கவிருப்பதை பிரதமர் ஏற்கனவே இவ்வாண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் தெரிவித்திக்கிறார். எனவே வாய்ப்பு இருந்தால் பெருமனதோடு இதனை நீட்டிப்போம் என Rafizi கூறினார். ஒருவேளை Padu வில் பதிவு செய்வது மற்றும் சரிபார்க்கும் நடவடிக்கையை நாங்கள் நீட்டித்தாலும் அது பெரிய அளவிலான உதவித் தொகை அமலாக்கைத்தை ஒத்திவைப்பதாகிவிடும் . ஒவ்வொரு மாதமும் ஒத்திவைக்கப்படும்போது குறிப்பாக பெட்ரோல் உதவித் தொகைக்காக அரசாங்கம் 2 பில்லியன் ரிங்கிட் இழப்பை எதிர்நோக்குவதாக Rafizi தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!