Latestமலேசியா

இவ்வாண்டு 780 ,000த்திற்கும் மேற்பட்ட இந்தியர்கள் உட்பட 26 மில்லியன் சுற்றுப் பயணிகள் மலேசியா வந்துள்ளனர்.

கோலாலம்பூர், டிச 4 – இவ்வாண்டு ஜனவரி முதல் நவம்பர் மாதம்வரை
780,000 த்திற்கும் மேற்பட்ட இந்தியர்கள் உட்பட 26 மில்லியன் சுற்றுப்பயணிகள் மலேசியாவுக்கு வருகை புரிந்துள்ளனர் என குடிநுழைவுத்துறையின் புள்ளி விவரங்கள் மூலம் தெரியவந்துள்ளது. இவர்களில் சிங்கப்பூரிலிருந்து அதிக அளவிலான அதாவது 12. 64 மில்லியன் சுற்றுப்பயணிகள் இங்கே வந்துள்ளனர். இதற்கு அடுத்த நிலையில் இந்தோனேசியாவிலிருந்து 3.16 மில்லியன் சுற்றுப் பயணிகளும், தாய்லாந்திலிருந்து 2.07 மில்லியன் சுற்றுப்பயணிகளும் சீனாவிலிருந்து 1.4 மில்லியன் சுற்றுப்பயணிகளும் வந்துள்ளனர்.

டிசம்பர் முதல் தேதியிலிருந்து இந்திய மற்றும் சீன சுற்றுப்பயணிகள் 30 நாள் விசா இன்றி இங்கு தங்கியிருக்க முடியும் என்பதால் அதிகமான சுற்றுப்பயணிகள் அடுத்த ஆண்டு வருகை புரிவார்கள் என சுற்றுலா , கலை மற்றும் கலாச்சார அமைச்சர் Tiong King Sing நம்பிக்கை தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!