Latestமலேசியா

துபாய் சதித்திட்டம் தொடர்பில் நாட்டில் 12 மாநிலங்களில் போலீஸ் புகார்

புத்ரா ஜெயா , ஜன 8 – துபாய் சதித்திட்டம் தொடர்பாக நாடு முழுவதிலும் 12 மாநிலங்களில் பல போலீஸ் புகார்கள் செய்யப்பட்டுள்ளதாக பிரதமரின் அரசியல் செயலாளரான டத்தோஸ்ரீ சம்சுல் இஸ்கந்தர் தெரிவித்தார்.

கோலாலம்பூர், ஜோகூர், மேலாக்கா, நெக்ரி செம்பிலான், சிலாங்கூர், பேராக், பினாங்கு, கெடா, பகாங், சபா, பெர்லிஸ் மற்றும் சரவாக் ஆகிய மாநிங்களில் போலீஸ் புகார்கள் செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார். மேலும் அதிகாமான போலீஸ் புகார்கள் செய்யப்படும். இதன்வழி போலீஸ் விசாரணையை மேற்கொள்ள முடியும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார். பிரதமரை மாற்றுவது மற்றும் அரசாங்கத்தை கவிழ்க்கும் பேச்சுக்களை நாம் ஒரு முடிவுக்கு நாம் கொண்டு வரவேண்டும் என இன்று புத்ரா ஜெயாவில் துபாய் சதித் திட்டம் குறித்து போலீசில் புகார் செய்த பின் செய்தியாளர்களிடம் பேசியபோது சம்சூல் இஸ்கந்தர் கூறினார்.

துபாய் சதித்திட்டத்தில் எவரும் பின்னணியில் இருந்தனரா என்பது குறித்து தமது போலீஸ் புகாரில் சம்சூல் பெயர் குறிப்பிடவில்லை. வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதால் போலீசார் கேள்வி கேட்பார்கள். இந்த விவகாரத்தை விசாரணை செய்யும் பொறுப்பை போலீசிடமே விட்டுவிடுவோம் என அவர் கூறினார். துபாய் சதித் திட்டத்தில் பல்வேறு எதிர்கட்சி தலைவர்களும் தலைமையேற்றுள்ளதாக கூறிய சம்சூல், அவர்களின் பெயர்களை வெளியிடவில்லை. போலீஸ் விசாரணையை தொடங்கும் பொருட்டு மேலும் அதிகமானோர் போலீசில் புகார் செய்வார்கள் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.பிரதமரை மாற்றுவது மற்றும் அரசாங்கத்தை கவிழ்க்கும் பேச்சுக்களை நாம் ஒரு முடிவுக்கு நாம் கொண்டு வரவேண்டும் என இன்று புத்ரா ஜெயாவில் துபாய் சதித் திட்டம் குறித்து போலீசில் புகார் செய்த பின் செய்தியாளர்களிடம் பேசியபோது சம்சூல் இஸ்கந்தர் கூறினார்.

துபாய் சதித்திட்டத்தில் எவரும் பின்னணியில் இருந்தனரா என்பது குறித்து தமது போலீஸ் புகாரில் சம்சூல் பெயர் குறிப்பிடவில்லை. வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதால் போலீசார் கேள்வி கேட்பார்கள். இந்த விவகாரத்தை விசாரணை செய்யும் பொறுப்பை போலீசிடமே விட்டுவிடுவோம் என அவர் கூறினார். துபாய் சதித் திட்டத்தில் பல்வேறு எதிர்கட்சி தலைவர்களும் தலைமையேற்றுள்ளதாக கூறிய சம்சூல், அவர்களின் பெயர்களை வெளியிடவில்லை. போலீஸ் விசாரணையை தொடங்கும் பொருட்டு மேலும் அதிகமானோர் போலீசில் புகார் செய்வார்கள் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

 

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!