Latestமலேசியா

சிலாங்கூர் மாநில அரசின் இலவச குடிநீர்த் திட்டம்; RM 5,000 ரிங்கிட் குறைவாக வருமானம் பெறுவோர் விண்ணபிக்கலாம்.

ஷா ஆலம், ஜன 12 – ஒரு மாதத்திற்கு RM 5,000 ரிங்கிட்டுக்கும் குறைவாக வருமானம் பெறும் சிலாங்கூர் வாசிகள் 20 கனமீட்டர் நீரை இலவசமாக வழங்கும் திட்டத்திற்கு விண்ணப்பிக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

‘Skim Air Darul Ehsan’ எனும் இந்த இலவச குடிநீர்த் திட்டத்திற்கு இவ்வாண்டு டிசம்பர் 31ஆம் தேதி வரை விண்ணப்பம் செய்யலாம் என்று Air Selangor தெரிவித்துள்ளது.

விண்ணப்பதாரர்களின் குடியிருப்பு தனி மீட்டரை கொண்டதாக இருக்க வேண்டும் என்பதோடு ஒரு நீர் கட்டண கணக்கிற்கு ஒரு விண்ணப்பத்தை மட்டுமே செய்ய முடியம். Air Selangor அகப்பக்கத்தின் வாயிலாக இந்த குடிநீர் திட்டத்தில் பங்கு பெறலாம் என்று அந்நிறுவனம் தெரிவித்திருந்தது.

இந்த இலவச குடிநீர் வழங்கும் திட்டத்தின் வாயிலாக, இது வரை 40 லட்சம் பேர் பயன் பெற்றுள்ளனர் என்று மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி அண்மையில் கூறியிருந்தார். மக்களின் சுமையைக் குறைக்கும் நோக்கிலான இந்த திட்டம் கடந்த பத்தாண்டுகளாக அமல்படுத்தப்பட்டு வருவதோடு தகுதி உள்ளத் தரப்பினர் மட்டுமே பயன் பெறும் வகையில் இத்திட்டம் தரம் உயர்த்தப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!