Latestமலேசியா

கைதிக்கு சொந்தமான 10,000 ரிங்கிட் நம்பிக்கை மோசடி குற்றத்தை சிறை அதிகாரி மறுத்தார்

கோலாலம்பூர். டிச 6 – ஜெலபு போதைப் பொருள் மறுவாழ்வு நிலையத்தை சேர்ந்த கைதி ஒருவருக்கு சொந்தமான கிட்டத்தட்ட 10 ,000 ரிங்கிட்டை நம்பிக்கை மோசடி செய்த குற்றத்தை சிறை அதிகாரி ஒருவர் மறுத்தார். குவாலா பிலாஹ் செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி நோர்மா இஸ்மாயில் முன்னிலையில் குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டபோது 33 வயதுடைய ஹஸ்ரி ஹிஷாம் ஹசான் அதனை மறுத்தார். பொதுச் சேவைத்துறையின் ஊழியர் என்ற முறையில் கைதி ஒருவருக்கு சொந்தமான பணத்தை பாதுகாக்கும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்ட போதிலும் அவர் நம்பிக்கை மோசடி செய்துள்ளார் என கூறப்பட்டது. இவ்வாண்டு மார்ச் மாதம் 30 ஆம் தேதி முதல் மே 1ஆம் தேதி வரை ஜெலபு மறுவாழ்வு மையத்தில் 9,850 ரிங்கிட்டை நம்பிக்கை மோசடி செய்ததாக ஹஸ்ரி ஹிஷாமிற்கு எதிராக குற்றஞ்சாட்டப்பட்டது. 5,000 ரிங்கிட் ஜாமினில் ஹஸ்ரி ஹிஷாம் விடுவிக்கப்பட்டார். அவருக்கு எதிரான குற்றச்சாட்டு ஜனவரி 10ஆம் தேதி மீண்டும் மறுவாசிப்புக்கு செவிமடுக்கப்படும் .

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!