Latestமலேசியா

மித்ராவுக்கு மீண்டும் ஆய்வு ஏன்? – தனேந்திரன் கேள்வி

கோலாலம்பூர், மார்ச் 10 – ஏற்கனவே இந்தியர்களின் சமூக பொருளாதார உருமாற்றம் தொடர்பாக நஜீப் காலத்தில் ஏற்கனவே ஆய்வு நடத்தப்பட்டுவிட்டது. இப்போது மீண்டும் மித்ராவுக்காக ஆய்வு நடத்த வேண்டிய அவசியம் ஏன் என மக்கள் சக்தி தலைவர் டத்தோஸ்ரீ ஆர்.எஸ் தனேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்தியர்களின் முன்னேற்றத்திற்காகத்தான் நஜீப் காலத்தில் இந்தியர்ளுக்காக சிடேக் ,சீட் , தெக்குன் போன்ற திட்டங்கள் உருவாக்கப்பட்டன. இந்தியர்களை ஒற்றுமைப்படுத்தவும் உண்மையிலேயே அவர்களுக்கு உதவும் நோக்கத்தில் நஜீப் மேற்கொண்ட சமூக பொருளாதார உருமாற்று திட்டங்களான அவற்றின் மூலம் பலர் நன்மை பெற்றனர்.

இப்போது இந்தியர்களுக்கு உதவுக்கூடிய மித்ரா இங்கும் அங்குமாக பந்தாடப்பட்டு வருவது ஏமாற்றம் அளிப்பதாக அவர் கூறினார். தற்போது மித்ராவுக்காக இன்னொரு ஆய்வு நடத்தப்போவதாக கூறுவது அதிர்ச்ச்சி அளிக்கிறது .

இந்தியர்களை வைத்து அரசியல் நடத்துவதை தவிர்த்து விட்டு மித்ரா மீண்டும் பிரதமர்துறையின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் என என மக்கள் சக்தி கட்சி கேட்டுக் கொள்ளவதாக இன்று நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அவர் வலியுறுத்தினார். இதனிடையே இம்மாதம் 23 ஆம் தேதி சுங்கை பட்டாணியில் சிவலிங்கேஸ்வரர் ஆலயத்தில் மண்டல அபிஷேக பூர்த்தி நிறைவு விழா நடைபெறுவதை முன்னிட்டு அந்த நிகழ்வில் திரளாக கலந்துகொள்ளும்படி பொதுமக்களுக்கு தனேந்திரன் அழைப்பு விடுத்தார்.

அதே நாளான்று மக்கள் சக்தியின் Retreat எனப்படும் கலந்துரையாடல் கெடாவில் மாலை 3மணிக்கு சுங்கை பட்டாணி Cinta Sayang Resort டடில் நடைபெறவிருப்பதாகவும் தனேந்திரன் தெரிவித்தார். இந்த கூட்டத்தில் இந்திய சமூகம் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சனைகள் குறித்து விவாதிக்கப்படும்.

இக்கூட்டத்தில் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றும்படி ம.இ.காவின் தேசிய தலைவர் டான்ஸ்ரீ SA விக்னேஸ்வரன் அழைக்கப்பட்டுள்ளார். இந்திய சமூகம் இப்போது எதிர்நோக்கியுள்ள பிரச்னைகளை கலந்து அலசி ஆராய்வதற்கான கலந்துரையாடலாக இந்த நிகழ்ச்சி அமையும்.

எனவே இந்த கலந்துரையாடலில் உரையாற்றுவதற்கு விக்னேஸ்வரனைவிட சிறந்த தலைவர் வேறு தலைவர் இருப்பதாக தாம் நினைக்கவில்லயென தனேந்திரன் கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!