Latestஇந்தியா

இந்தியாவில் இயங்கலை நேரலையில் சக ஊழியரை “PROPOSE” செய்த பயிற்சி ஆசிரியர்

இந்தியா, மார்ச்-13 – இந்தியாவில் இயங்கலை (Online) வகுப்பின் போது சக ஊழியரான பெண்ணிடம் தனது காதலை வெளிப்படுத்தி propose செய்த பயிற்சி ஆசிரியரின் (Tutor) செயல் பேச்சுப் பொருளாகியுள்ளது.

அந்த Proposal வீடியோ வைரலாகி கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது.

‘Biggest Surprise Reveal’ என்ற தலைப்பில் Online நேரலையின் போது, நவ்நீத் திவாரி எனும் அந்த பயிற்சி ஆசிரியர் Sona Sharma-வை propose செய்தார்.

” இது சரியா தவறா என எனக்குத் தெரியாது. ஆனால் உன்னை என் வாழ்கைத் துணையாக்கி கொள்ள விரும்புகிறேன். வாழ்நாள் முழுவதும் நீ என்னுடன் வர வேண்டும். என்னைத் திருமணம் செய்துக் கொள்கிறாயா? ” என திவாரி கலங்கிய கண்களுடன் ஆசையை வெளிப்படுத்த, சோனா அதிர்ச்சியில் உறைந்தார்.

” நான் இதை சற்றும் எதிர்பார்க்கவில்லை. இது Live-வாக போகும் என்றும் தெரியாது. வாயடைத்துப் போயிருக்கிறேன்” என சோனா சொல்வது வைரல் வீடியோவில் தெரிகிறது.

ஒருவாராக சுதாகரித்துக் கொண்ட சோனா திவாரியின் Proposal-லை ஏற்றுக் கொண்டு, அடுத்தக் கட்டமாக பெற்றோரிடம் பேசுவது தான் முறை என்றார்.

இந்த ‘ஆச்சரியமான’ சம்பவம் மாணவர்கள் மத்தியில் புது வித அனுபவமாக அமைந்தாலும், நெட்டிசன்கள் விடுவதாக இல்லை.

சிலர் ஆதரவாக ஆர்ப்பரித்தாலும், பலர் அவ்விரு ஆசிரியர்களையும் ‘விளாசி’ வருகின்றனர்.

இதுதான் கல்வியாளர்களின் லட்சணமா? மாணவர்களுக்கு எவ்வளவு சிறந்த உதாரணம் இது… பரீட்சையில் ஆறேழு கேள்விகள் இந்த Proposal பற்றி தான் இருக்கப் போகிறது என வறுத்தெடுக்கின்றனர்.

அதிலும் ஒரு நெட்டிசன் ” இவர்கள் உண்மையிலேயே ஆசிரியர்கள் தானா? அப்படி அது உண்மையென்றால் நான் இப்போதே இந்த இணையத்தை விட்டு வெளியேறுகிறேன்” என ஆதங்கத்தைக் கொட்டித் தீர்த்தார்.

நெட்டிசன்கள் பொறிந்துத் தள்ளினாலும் அவ்விரு பயிற்சி ஆசிரியர்கள் மீது அவர்கள் சார்ந்த கல்வி நிறுவனம் நடவடிக்கை ஏதும் எடுத்ததா என்ற தகவல் இல்லை.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!