Latestமலேசியா

காஸா போர்; மெக்டோனல்ட்ஸ்சை புறக்கணிப்பு செய்ய பிரச்சாரம் மேற்கொண்ட தரப்புக்கு எதிராக RM6 மில்லியன் நஷ்ட ஈடு வழக்கு

கோலாலம்பூர், டிச 30 – மெக்டோனல்ட்ஸ் துரித உணவகம் காஸா போருக்கு ஆதரவு தெரிவிப்பதாக கூறி அதனை புறக்கணிக்குமாறு நாட்டில் சில தரப்புகள் மேற்கொண்ட பிரச்சாரத்தினால் அவ்வுணவகத்தை மலேசியாவில் நடத்திவரும் ‘GAR’ எனும் ‘Gerbang Alaf Restaurant’ நிறுவனம் சம்பந்தப்பட்ட தரப்புக்கு எதிராக 6 மில்லியன் ரிங்கிட் நஷ்ட ஈடு கேட்டு வழக்கு போட்டுள்ளது.

வருமானம் பாதிக்கப்பட்டதற்கு 3 மில்லியன் ரிங்கிட் நஷ்ட ஈடும், தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்யப்பட்டதற்கு இழப்பீடாக 1.5 மில்லியன் ரிங்கிட்டும், காலாவதியான பொருட்களுக்கு 1.5 மில்லியனும் என மொத்தம் 6 மில்லியன் ரிங்கிட்டை நஷ்ட ஈடாக அந்நிறுவனம் கோரியுள்ளது.

காஸாவுக்கும் இஸ்ரேலுக்கும் நடக்கும் போரால் அனைத்துலக உணவு நிறுவனமான மெக்டோனல்ட்ஸை புறக்கணிக்குமாறு ‘BDS மலேசியா’, போய்க்கோட் ‘Boycott’,   டிவிஸ்ட்மென்ட் ‘Divestment’, சாங்க்ஷன்ஸ் மலேசியா ‘Sanctions Malaysia’ தரப்பு மலேசியர்களை தூண்டியதாக அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

மெக்டோனல்ஸ் ஊழியர்கள் மிரட்டப்பட்ட மற்றும் சமூக வலைத்தளத்தில் அவர்கள் அவமானப்படுத்தப்பட்ட சம்பவங்களும் நடந்ததாக அது கூறியுள்ளது.

2.3 மில்லியன் பாலஸ்தீனியர்களின் இனப்படுகொலையில் அந்த நிறுவனம் ஈடுபட்டுள்ளதாகவும், இஸ்ரேல் அல்லது அதன் இராணுவத்துடன் ஒத்துழைத்ததாகவும், பாலஸ்தீனியர்களை பெருமளவில் கொன்றதன் மூலம் லாபம் ஈட்டியதாகவும், BDS மலேசியா, அவதூறு பரப்பியதாக GAR கூறியுள்ளது.

மெக்டோனல்ஸ் நிறுவனம் இவை எதிலும் சம்பந்தடவில்லை என்றும், அந்நிறுவனம் 100 சதவிகிதம் முஸ்லிம்களுக்கு சொந்தமானது என்றும் அதன் வாடிக்கையாளர்களில் 55 சதவிகிதம் முஸ்லிம்கள் என்றும் GAR கூறியிருக்கிறது.

முகநூல், இன்ஸ்தாகிராம் மற்றும் அதன் அகப்பக்கத்திலும் BDS மலேசியா வெளியிட்ட அவதூறு பதிவினால் GAR நிறுவனத்தின் நற்பெயர் பாதிக்கப்பட்டதோடு, மக்களும் மெக்டோனல்ட்சை வெறுக்கத் தொடங்கியிருப்பதாகவும் தனது நஷ்ட ஈடு மனுவில் அது குறிப்பிட்டுள்ளது.

இதனிடையே, இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ள BDS மலேசியா, நீதிமன்றமே இவ்விவகாரம் தொடர்பில் முடிவு செய்ய தாங்கள் விட்டுவிடுவதாக கூறியிள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!