Latestமலேசியா

இந்தியர்களை மாட்டிறைச்சி சாப்பிடவும் ,  மலாய்க்காரர்களை பன்றி இறைச்சி சாப்பிடவும் வற்புறுத்தினர் – லாவோஸில் வேலை மோசடி

சிப்பாங், டிச 24 –  லாவோஸில் வேலை மோசடி கும்பலினால்  மனித கடத்தலுக்கு இலக்காக 5 மலேசியர்கள் காப்பாற்றப்பட்டு நேற்று முன்தினம் பத்திரமாக நாடு திரும்பியுள்ளனர்.

அவர்களில் 25 வயது கிருபானந்தன், கிருபாகரன், 35 வயது தினகரன், 26 வயது ஃபர்ஹானா ஜைனல் அப்டைன் மற்றும் முஹம்மது அமிருல் நோர் அஸ்மான் என 3 இந்தியர்களும் 2 மலேசியர்களும் அடங்குவர்.

இதற்கிடையில் அவர்கள் தங்களுக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவத்தை பகிர்ந்துக் கொண்டுள்ளனர்.

லாவோஸைச் சேர்ந்த நிறுவனம் ஒன்றில் ஆன்லைன் வாடிக்கையாளர் சேவை அதிகாரியாக, மாத சம்பளம் RM6,000 ரிங்கிட்டும், தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்தால் தங்குமிட வசதி செய்து தருவதாக வாக்குறுதி வழங்கப்பட்டுள்ளது.

“தொடக்கத்தில் லாவோஸ் சென்றடைந்தவுடன் எங்களை, ஒர் இடத்தில் இரண்டு வாரங்கள் ஆன்லைன் வாடிக்கையாளர் சேவை அதிகாரிகளாகப் பணிபுரிய வற்புறுத்தினர்.

பின்னர், சீனா மற்றும் தைவான்காரர்களிடம்  விற்றுவிட்டனர். அங்கே ஒரு வீட்டில் இந்தியர்களாகிய எங்களை  மாட்டிறைச்சி சாப்பிடவும் , மலாய்க்காரர்களை பன்றி இறைச்சி சாப்பிடவும் கட்டாயப்படுத்தினர்” என கிருபானந்தன் கூறினார்.

வேலை செய்யாவிட்டால் கால்களை உடைத்து விடுவதாகவும் தாங்கள் மிரட்டப்பட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.

எங்களின் கடப்பிதழும் கைப்பேசியும் அவர்கள் எடுத்து வைத்துக் கொண்டனர். வேறு வழியில்லாமல் நாங்கள் லாவோஸ் நாட்டவர்களின் கைப்பேசியை இரவல் வாங்கி எங்களை காப்பாற்றுமாறு பலரிடம் உதவி கேட்டோம்.

அதன் பின்னர், அங்குள்ள ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் சிம் சோன் சியாங் அவருடைய உதவியுடன் நாங்கள் காப்பாற்றப்பட்டோம் என அவர்கள் தங்களின் கசப்பான அனுபவத்தை பகிர்ந்துக் கொண்டனர்.

இதனிடையே, பொதுமக்கள் வெளிநாடுகளில் அதிக சம்பளம், நல்ல வசதி என வழங்கப்படும் வேலை வாய்ப்புகளை நம்பி மோசடி கும்பல்களிடம் சிக்கிக்கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தப்படுகின்றனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!