Latestமலேசியா

தொழிலதிபர் மோகன் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரம்; சீராய்வு மனு தொடர்பில் ஜனவரி 10ஆம் தேதி தீர்ப்பு

கோலாலம்பூர், டிச 21 – ஏழு ஆண்டுகளுக்கு முன்பு பேரா சித்தியவானில் போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் தொழிலதிபர் மோகன் மரணம் அடைந்தது தொடர்பாக மரண விசாரணை அதிகாரி வழங்கிய முடிவுக்கு எதிராக மோகனின் குடும்பத்தினர் செய்து கொண்ட சீராய்வு மனு மீதான விசாரணையின் தீர்ப்பு ஜனவரி 10ஆம் தேதி தெரிவிக்கப்படும் என உயர்நீதிமன்றத்தின் நீதித்துறை ஆணையர் மோசஸ் சூசயன் தெரிவித்தார்.

மோகனின் மரணம் தொடர்பாக விசாரணைக்குழு தலைவர் வழங்கிய வெளிப்படையான தீர்ப்பு ஏற்றுக்கொள்ள முடியாது என அவரது குடும்பத்தினர் செய்துகொண்ட சீராய்வு மனு மீதான வாதத் தொகுப்பை வழக்கறிஞர் ராம் குமார் சமர்பித்ததை செவிமடுத்த பின்னர் மோசஸ் சூசயன் இதனை தெரிவித்தார்.

மோகனை சுட்டுக்கொல்லவதற்கு தாங்கள் பெற்ற உத்தரவு மற்றும் போலீஸ்காரர்கள் தெரிவித்த அம்சங்களை மரண விசாரணை நீதிமன்ற தலைவர் கவனத்தில் எடுத்துக் கொள்வதற்கு தவறிவிட்டதையும் ராம் குமார் தமது வாதத் தொகுப்பில் சுட்டிக்காட்டினார். இறந்தவர் பயன்படுத்தியதாகக் கூறப்படும் துப்பாக்கியிலிருந்து வெளியான தோட்டா உறை எதுவும் கிடைக்கவில்லை என்று ராம் கூறினார். இறந்தவர் பயன்படுத்தியதாக கூறப்படும் துப்பாக்கி தொடர்பான கைரேகைகள், மரபணு பரிசோதனை மாதிரி எதுவும் கண்டறியப்படவில்லை என்பதையும் ராம் குமார் தெரிவித்தார். மரண பரிசோதனை விசாரணை குழுவின் தலைவரின் தீர்ப்பில் அதிருப்தி அடைந்த மோகனின் குடும்பத்தினர் கடந்த ஆண்டு உயர்நீதிமன்றத்தில் சீராய்வு மனுவை தாக்கல் செய்திருந்தனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!