Latestமலேசியா

இரண்டு நிபந்தனைகளை பூர்த்திச் செய்தால், மலாய்க்காரர் அல்லாதவர் பிரதமர் ஆகலாம்; கூறுகிறார் பைசால்

கோலாலம்பூர், டிசம்பர் 21 – மலாய்க்காரர் அல்லாதவர்கள், நாட்டின் பிரதமராக ஏற்றுக் கொள்ளப்படுவதற்கு, இரு முக்கிய நிபந்தனைகளை, பெர்சத்து இளைஞர் பிரிவு தலைவர் வான் அஹ்மாட் பைசால் வான் அஹ்மாட் கமால் முன் வைத்துள்ளார்.

முதலில் அவர்கள் முஸ்லீமாக இருக்க வேண்டும். இரண்டாவதாக, மலாய் கலாச்சாரம் மற்றும் பழக்கவழக்கங்களை கடைப்பிடிப்பதில் திறமையானவராக இருக்க வேண்டும் என்பதே அந்த இரு நிபந்தனைகள் ஆகும்.

இதற்கு முன், மலாய் முஸ்லீம்களுக்கு மட்டும் பிரத்தியேகமாக, பிரதமர் பதவியை மட்டுப்படுத்தும் வகையில், அரசியமைப்புச் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட வேண்டுமென கூறியிருந்த மாஞ்சாங் நாடாளுமன்ற உறுப்பினருமான பைசால், தமது முந்தைய கடுமையான நிலைப்பாட்டிலிருந்து மெல்ல இறங்கி, மலாய்க்காரர் இல்லாத ஒரு நபரை, நாட்டின் பெரும்பான்மை மக்கள் பிரதமராக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றால் அது ஒன்று தான் வழி என தெரிவித்துள்ளார்.

மதத்தையும், அரசியலையும் பிரிக்க முடியாது. அதனால், மலாய்க்காரர் அல்லாத ஒருவர் முஸ்லீமாக இருக்க வேண்டும் என்பதே முதல் முக்கியமான நிபந்தனை எனவும் பைசால் குறிபிட்டுள்ளார்.

மலாய்க்காரர்கள் இனவெறி கொண்டவர்கள் அல்ல. கிட் சியாங்கின் அடிப்படைக் கொள்கையை ஏற்க தயார். ஆனால், மலாய் தேசியவாதத்தை அடிப்பாடையாக கொள்ளாத அரசியல் கட்சிகளுக்கு அது மிகுந்த சவாலானதாக இருக்குமென பைசால் குறிப்பிட்டார்.

எனவே, அரசியல் என்பது கொள்கையை மட்டுமே சார்ந்தது அல்லது. மலேசிய அரசியலில், ஒருவர் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும், கலாச்சரம் மற்றும் மதச் சூழநிலைகளை கணக்கில் எடுத்துக் கொண்டே ஆக வேண்டும் என்றாரவர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!