Latestமலேசியா

கேளிக்கை கண்காட்சியில் Sotong Ride ஏறிச் சென்றபோது கீழே விழுந்து இருவர் காயம்

கோத்தா கினபாலு, மார்ச் 7 – கோத்தா கினபாலு லீக்கஸ் விளையாட்டரங்கில் நடைபெற்ற Funfair கண்காட்சியில் கனவாய் போன்ற சாதனத்தில் உல்லாசமாக ஏறிச் சென்ற இருவர் கீழே விழுந்ததால் காயம் அடைந்தனர். நேற்றிரவு Sotong Ride விளையாட்டில் பங்கேற்பதற்காக அதில் ஏறிச் சென்றபோது ஒரு ஆடவரும் பெண்ணும் கீழே விழுந்தனர். அந்த Sotong Ride நகர்ந்துகொண்டிருந்தபோது அவர்கள் கீழே விழுந்த சம்பவம் சமூக வலைத்தளத்திலும் வைரலானது. சம்பவம் நடந்தபோது அங்கிருந்த இருவர் கீழே விழுந்ததைத்க கண்டு அதிர்ச்சியடைந்ததாக முகநூல் பயனாளி ஒருவர் பதிவிட்டுள்ளார்.

அது தொடர்பான காணொளிக் காட்சியையும் தமது முகநூலில் பதிவிட்ட அவர் கீழே விழுந்தவர்களுக்காக தமது அனுதாபத்தையும் தெரிவித்துக் கொண்டர். சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு தகவல் அறிந்து சென்ற கோத்தா கினபாலு தீயணைப்பு நிலயத்தின் அவசர சேவைப்பிரிவின் அதிகாரிகள் , காயம் அடைந்தவர்களுக்கு முதலுதவி வழங்கிய பின் சிகிச்சைக்காக அவர்களை Queen Elizabeth மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!