Latestமலேசியா

ரூ.42.3 லட்சத்துக்கு உணவு ஓர்டர் செய்த பெண்! 2023யில் சுவாரசியமான தகவல்

புதுடெல்லி, டிசம்பர் 15: 2023ஆம் ஆண்டு குட்பை சொல்லிவிட்டு 2024ஆம் ஆண்டை வரவேற்க தயாராகிவிட்டோம்.

அவ்வகையில் இந்த ஆண்டில் நடந்த மறக்கமுடியாத விஷயங்கள், மக்களால் அதிகம் தேடப்பட்டது, விரும்பப்பட்டது என பல பட்டியல்கள் வெளியாகிக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில் உணவு டெலிவரி நிறுவனமான ஸ்விக்கியில் இருந்து வெளியிடப்பட்ட தகவல் பலரது புருவத்தையும் உயர்த்த வைத்துவிட்டது எனலாம்.

ஆம் மும்பையை சேர்ந்த ஸ்விக்கி வாடிக்கையாளர்களில் ஒருவர், 2023-ஆம் ஆண்டில் ரூ.42.3 லட்சத்துக்கு அதாவது ஏறக்குறைய 2 லட்சத்து 30 ரிங்கிட்டிற்கு உணவை Order செய்துள்ளாராம்.

அதேபோல் Jhansi-யில் வசிக்கும் நபர் ஒருவர் ஒரே நாளில் 269 பொருட்களை ஓர்டர் செய்துள்ளார்.

மேலும், இந்த ஆண்டில் இதுவரை 85 லட்சம் கேக்குகளை ஓர்டர் செய்துள்ளதால் பெங்களூரை கேக் தலைநகரமாக அறிவித்துள்ளது ஸ்விக்கி நிறுவனம்.

குறிப்பாக காதல் தினத்தன்று மட்டும் நிமிடத்திற்கு 271 கேக்குகள் டெலிவரி செய்யப்பட்டதாகவும் ஸ்விக்கி கூறுகிறது.

எவ்வாறாயினும், இந்தியா முழுவதும் ஓவ்வொரு விநாடிக்கும் 2.5 பிரியாணிகள் ஓர்டர் செய்யப்படுகின்ற நிலையில், மீண்டும் 8ஆம் முறையாக இவ்வருடமும் பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளது என அந்நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!