Latestசினிமா

அரசியலில் குதிக்கிறார் நடிகர் விஜய்; கட்சிக்குத் தமிழக வெற்றிக் கழகம் எனப் பெயர்

சென்னை, பிப் 2 – சினிமாவிலிருந்து விலகி, முழு நேர தமிழக அரசியலில் ஈடுபடவிருப்பதாக நடிகர் விஜய் அறிவித்திருக்கிறார்.

தமிழக வெற்றிக் கழகம் என்று தனது கட்சிக்குப் பெயர் சூட்டியிருக்கும் நடிகர் விஜய், அதனை x தளத்திலும் பதிவிட்டிருக்கிறார்.

“என்னுடைய தாய் தந்தைக்கு அடுத்து எனக்கு பெயர், புகழ் மற்றும் எல்லாமும் கொடுத்த தமிழ்நாட்டு மக்களுக்கும் தமிழ்ச் சமுதாயத்திற்கும் என்னால் முடிந்த வரையில் இன்னும் முழுமையாக உதவ வேண்டும் என்பதே எனது நீண்டகால எண்ணம் மற்றும் விருப்பமாகும்.

“வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று மக்கள் விரும்பும் அடிப்படை அரசியல் மாற்றத்திற்கு வழிவகுப்பதுதான் நமது இலக்கு,” என்று விஜய் தமது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் தமது கட்சி போட்டியிடாது என்றும் எந்தக் கட்சிக்கும் ஆதரவு அளிக்க மாட்டோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

“நான் ஏற்கெனவே ஒப்புக்கொண்டுள்ள இன்னொரு திரைப்படம் சார்ந்த கடமைகளை, கட்சிப் பணிகளுக்கு இடையூறு இல்லாத வகையில் முடித்துவிட்டு, முழுமையாக, மக்கள் சேவைக்கான அரசியலில் ஈடுபடவுள்ளேன். அதுவே தமிழ்நாட்டு மக்களுக்கு நான் செய்யும் நன்றிக்கடனாகக் கருதுகிறேன்,” என்றும் விஜய் கூறியுள்ளார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!