Latestஉலகம்

உலகின் பூமி தினத்தை முன்னிட்டு பாரிஸில் ஈபில் டவர் விளக்குகள் அனைக்கப்பட்டன

பாரிஸ், மார்ச் 24 – பருவ நிலை பாதிப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பிலிருந்து உலகை பாதுகாக்கும் பொருட்டு 2007 ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் மார்ச் மாதம் 23ஆம் தேதியன்று உலகின் பூமிதினம் அனுசரிக்கப்படுகிறது. அந்த வகையில் நேற்று சனிக்கிழமை உலகில் பல நாடுகளில் உள்ளூர் நேரப்படி இரவு மணி 8.30 அளவில் சில நிமிடங்களுக்கு மின் விளக்குகளை அணைக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

பிரான்ஸில் சுற்றுப்பயணிகளின் முக்கிய அடையாள சின்னமாக விளங்கும் Eiffel Tower கோபுரத்தின் அனைத்து மின் விளக்குகளும் ஏழு நிமிடங்களுக்கு அனைக்கப்பட்டன. இதே நேரத்தில் லண்டனில் Buckingham Palace மற்றும் Big Ben கடிகார விளக்குகள் , சிட்னியில் Opera house , நியூ யார்க்கில் Empire State Building, Seattle லில் Space Needle போன்றவற்றிலும் சுற்றுப்புற விழிப்புணர்வை வெளிப்படுத்தும் வகையில் அனைத்து மின் விளக்குகளும் அணைக்கப்பட்டன.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!