கோலாலம்பூர், பிப் 2 – சாலைப் போக்குவரத்துத் துறை (JPJ) ‘DEY’ என்ற எழுத்துக்களைக் கொண்ட புதிய வாகன ப்ளேட்டுகளை தற்போது அறிமுகம் செய்துள்ளது.
வருகின்ற 12 ஆம் திகதி தொடங்கி 16 திகதி இரவு பத்து மணி வரை அந்த நம்பர் பிளேட்டை வாங்க JPJ இணைய பக்கத்தில் ஏலம் எடுக்க முடியும் என்று பொது மக்களுக்கு அறிவித்துள்ள நிலையில் அதனை ஏலம் எடுக்க முந்தியடிக்கின்றனர் மக்கள்.
‘DEY’ என்பது ஒருவரை அழைக்க அல்லது ஒருவரின் கவனத்தை ஈர்க்கப் பயன்படுத்தப்படும் ஒரு தமிழ் வழக்கு சொல்லாகும்.
இந்த சொல்லை JPJ தேர்ந்தெடுத்ததைக் கண்டு மக்கள் ஆச்சரியத்தில் மூழ்கியுள்ளனர்.
இந்த பதிவு 24 மணி நேரத்திற்குள் மிகவும் வைரலாகி பலராலும் பகிரப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.