Latestமலேசியா

டைய்ம் ஜைனுடின் விசாரணை தொடர்பில் சாட்சியம் அளிக்க சென்ற நால்வருடன் உடன் வந்த வழக்கறிஞர்களுக்கு MACC அனுமதி மறுப்பு

கோலாலம்பூர், ஜன 4 – முன்னாள் நிதியமைச்சர் டைம் ஜைனுடின் விசாரணை தொடர்பில் மேலும் நான்கு தனிப்பட்ட நபர்களை விசாரணைக்கு வரும்படி இன்று MACC அழைப்பு விடுத்தது. எனினும் விசாரணைக்கு தங்களது கட்சிக்காரர்களுடன் உடன் வருவதற்கு MACC தடுத்ததை அவர்களது வழக்கறிஞர்கள் சாடினர். வழக்கறிஞர்கள் உள்ளே செல்வதை தடுத்த MACC-யின் முடிவு அடக்குமுறை மற்றும் சட்டவிரோதமானது என வழக்கறிஞர் ராஜேஸ் நாகராஜன் தெரிவித்தார். விசாரணைக்கு அழைக்கப்பட்ட நால்வரும் MACC-க்கு முழுமையாக ஒத்துழைப்பு வழங்கியதோடு அவர்கள் வாக்குமூலம் வழங்குவதற்கு MACC தலைமையகத்திற்கு வருகை புரிந்ததாக ராஜேஸ் தெரிவித்தார். வாக்குமூலம் அளிக்க வந்தவர்களுடன் உடன் வருவதற்கு வழக்கறிஞர்கள் மறுக்கப்பட்டதற்கான காரணம் குறித்து விளக்கம் அளிக்கும்படி MACC தலைமை ஆணையர் ஆசாம் பாக்கியை ராஜேஸ் கேட்டுக்கொண்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!