Latest

முற்றுகையிட்ட காஸாவில் இஸ்ரேல் விமானங்கள் தொடர்ந்து வான் தாக்குதலை நடத்தி வருகிறது

காஸா, மார்ச் 28 – முற்றுகையிடப்பட்ட காஸாவில் இஸ்ரேலிய படைகள் தொடர்ந்து குண்டு வீச்சு தாக்குதலை நடத்தி வருகின்றன. பல்வேறு மருத்துவமனை பகுதிகளில் உள்ள ஹமாஸ் தரப்பினருக்கு எதிராக இஸ்ரேல் மூர்க்கத்தமான தாககுதல்களை நடத்திவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. போர் நிறுத்தத்திற்கு ஐ.நா பாதுகாப்பு மன்றம் கோரிக்கை விடுத்த போதிலும் அதனை புறக்கணித்துவிட்டு இஸ்ரேல் போர் விமானங்கள் தொடர்ந்து தாக்குதலை மேற்கொண்டு வருகின்றன.

பிணையாளிகளை விடுவிப்பது தொடர்பில் Qatar ஏற்பாட்டில் அமெரிக்கா மற்றும் எகிப்தை சேர்ந்த சமரச பேச்சாளர்களுக்கிடையே இதுவரை எந்தவொரு இணக்கமும் காணப்படவில்லை. இந்த விவகாரத்தில் ஏற்பட்டுள்ள முட்டுக்கட்டைக்கு ஹமாஸ் தரப்பினரும் இஸ்ரேலும் ஒருவரை ஒருவர் குறைகூறி வருகின்றனர். காஸாவில் மோசமான உணவு பற்றாக்குறை நீடித்து வருவது தொடர்பில் அமெரிக்காவுக்கும் இஸ்ரேலுக்குமிடையே பதட்ட நிலை அதிகரித்து வருகிறது. ராபா நகரின் தென் பகுதியில் பெரிய அளவில் தரை தாக்குதலை நடத்துவதற்கு இஸ்ரேல் திட்டமிட்டுள்ளதையும் அமெரிக்கா கடுமையாக எதிர்த்து வருகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!