Latestஉலகம்

மாஸ்கோவில் கலைநிகழ்ச்சி மண்டபத்தில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் மரண எண்ணிக்கை 143 ஆக உயர்வு

மாஸ்கோ, மார்ச் 24 – ரஸ்யாவில் மாஸ்கோவுக்கு அருகே கலைநிகழ்ச்சி மண்டபத்தில் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் மரணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 143ஆக உயர்ந்துள்ள வேளையில் அந்த தாக்குதல் சம்பவத்தில் நேரடியாக சம்பந்தப்பட்ட 4 துப்பாக்கிக்காரர்கள் உட்பட 11 சந்தேகப் பேர்வழிகள் கைது செய்யப்பட்டனர். ரஷ்யாவின் Bryansk வட்டாரத்தில் காரில் தப்பிய சந்தேகப் பேர்வழிகள் துரத்தி பிடிக்கப்பட்டதாக ரஷ்ய பாதுகாப்பு நிறுனத்தின் அதிகாரிகள் தெரிவித்தனர் . அந்த தாக்குதலை நடத்தியோர் உக்ரைய்னில் உள்ளவர்களுடன் தொடர்பு வைத்திருந்ததோடு எல்லைப் பகுதிக்கு காரில் தப்பிச் செல்ல முயன்றனர்.

இதனிடையே இந்த தாக்குதலுக்கும் உக்ரைய்னுக்கும் எந்தவொரு தொடர்பும் இல்லையென்றும் அதன் அதிபர் தெரிவித்திருக்கிறார். அந்த தாக்குதலுக்கு மாஸ்கோவின் சிறப்பு சேவைகள் பிரிவு பின்னணியாக இருந்திருப்பதாக உக்ரைய்ன் ராணுவ உளவுத்துறை தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலுக்கு தாங்கள் பொறுப்பு வகிப்பதாக IS தரப்பு கூறிக்கொண்டது. மாஸ்கோவில் கலைநிகழ்ச்சி நடைபெற்ற மண்டபத்தில் பெரிய அளவில் கூடியிருந்த கூட்டத்தினரை நோக்கி தாக்குதல் நடத்தியதாக i .S இயக்கம் கூறிக்கொண்டது. தாக்குதல் நடத்தியவர்கள் தங்களது உருவத்தை மறைக்கும் சீருடையை அணிந்திருந்ததோடு கலைநிகழ்ச்சி நடைபெற்ற மண்டபத்திற்குள் நுழைந்து கண்மூடித்தனமாக சுட்டதோடு கையெறி குண்டுகளையும் வீசினர். சம்பவம் நடந்த மண்டபத்தில் தீப்பற்றியதால் அதனை அணைப்பதற்கு மூன்று ஹெலிகாப்டர்களும் பயன்படுத்தப்பட்டன.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!