Latestமலேசியா

கவனக் குறைவால் இரு கால்கள் துண்டிக்கப்பட்டன; மருத்துவமனைக்கு எதிராக உதவிப் பொறியிலாளர் வழக்கு

ஷா அலாம், ஏப் 16 – பிரபல தனியார் மருத்துவமனையின் அறுவை சிகிச்சை நிபுணரின் அலட்சியத்தால் தனது இரண்டு கால்களும் துண்டிக்கப்பட்டதைத் தொடர்ந்து அந்த மருத்துவமனைக்கு எதிராக ஷா அலாம் மாநகர் மன்றத்தின் உதவிப் பொறியியலாளரான 41 வயதுடைய Isman Ibrahim இழப்பீடு வழக்கு தொடுத்துள்ளார். 5ஆண்டுகளுக்கு முன் Appendicitis பாதிப்பினால் சிகிச்சைக்காக மருத்துவமனைக்குச் சென்றேன், ஆனால் மருத்துவரின் அலட்சியத்தால், நான் என் கால்களை இழந்தேன். மருத்துவர் முக்கிய இரத்த நாளங்களை துளைத்து கட்டியபோது அறுவை சிகிச்சை சரியாக நடக்கவில்லை, இதனால் இரண்டு கால்களும் கருப்பாக மாறியது என்று Isman Ibrahim
ஷா அலாமில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு மனுவை தாக்கல் செய்த பின் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து தாம் மற்றொரு தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டதாகவும் அங்கு தனது உயிரைக் காப்பாற்ற இரு கால்களும் தொடை வரை துண்டிக்கப்பட்டன. அந்த நேரத்தில் தனது மனைவி நான்காவது குழந்தையுடன் கர்ப்பமாக இருந்தார். எனது நிலைமையை பார்த்து எனது மூன்று குழந்தைகளும் அழுது கதறினர். எனது நிலை அவர்களுக்கு தெரியாமல் இருப்பதற்காக கால்கள் துண்டிக்கப்பட்ட தகவலை 10 நாட்கள் அவர்களுக்கு மறைக்க வேண்டிய தர்மசங்கடமான நிலையில் இருந்ததையும் Isman ibrahim வேதனையோடு விவரித்தார்.

தொடக்க கட்டமாக இழப்பீடு கோரிக்கை RM55 மில்லியன் ரிங்கிட்டாக இருந்தபோதிலும், செயற்கைக் கால்களுக்கான உண்மையான செலவுகளைப் பெறுவது உட்பட தமது கட்சிக்காரரின் நலனை உறுதிப்படுத்தும் கோரிக்கையை மீண்டும் தாக்கல் செய்யப்போவதாக Isman னின் வழக்கறிஞர் Firhad Muhd Fikri தெரிவித்தார். வாதி இயல்பு வாழ்க்கையை வாழ வேண்டும். அதற்கான நடவடிக்கை அடுத்த மாதத்திற்குள் எடுக்கப்படும் என அவர் உறுதியளித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!