Latestமலேசியா

வெப்பம் அதிகரிப்பால், நிழல் தேடி கட்டடங்களில் புகும் பாம்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் ; ஜோகூர் தீயணைப்பு மீட்புத் துறை எச்சரிக்கை

ஜோகூர் பாரு, பிப்ரவரி 19 – வெப்பமான வானிலையால், நிழல் தேடி கட்டங்களுக்குள் நுழையும் ஊர்வன விலங்குகளின் எண்ணிக்கை அதிகரிக்கலாம்.

குறிப்பாக, கட்டடங்கள், வீடுகள், வாகனங்கள் மற்றம் சில சமயங்களில் காலணிகளில் கூட பாம்புகள் அல்லது சிறிய உடும்புகள் தஞ்சம் புக வாய்ப்புள்ளது.

நாட்டில் வறட்சியான வானிலை தொடங்கி விட்டதால், பாம்புகளை பிடிக்க கோரி விடுக்கப்படும் அவசர அழைப்புகள் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக, ஜோகூர் தீயணைப்பு மீட்புப் துறையில் அமலாக்க பிரிவு உதவி இயக்குனர் அஸ்மி அப் ரஹீம் தெரிவித்தார்.

கடந்தாண்டு இதே காலகட்டத்தில், பாம்புகளை பிடிக்க நான்காயிரத்து 329 அழைப்புகள் கிடைத்த வேளை ; முந்தைய ஆண்டு நான்காயிரத்து 414 அழைப்புகள் விடுக்கப்பட்டன.

அதனால், குடியிருப்பாளர்கள், குறிப்பாக வனப்பகுதிக்கு அருகில் வசிப்பவர்கள் கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதோடு, விழிப்பு நிலையிலும் இருக்குமாறு அறிவுறுதப்படுகின்றனர்.

புற்களை வெட்டி வீட்டின் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக் கொள்வதோடு, துளைகளை மூடுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சில பாம்புகள் கொடிய விஷயத் தன்மை கொண்டவை என்பதால், அவற்றை சொந்தமாக அடித்துக் கொல்ல முற்படாமல், உடனடியாக தீயணைப்பு மீட்புப் படைக்கு அழைப்பு விடுக்குமாறும் பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!