Latestமலேசியா

94 வங்காளதேச தொழிலாளர்களை கைவிடட நிறுவனத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை

புத்ராஜெயா, பிப் 27- கடந்தாண்டு நவம்பர் மாதம் நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட 94 வங்காளதேச தொழிலாளர்களைக் கைவிட்ட நிறுவனத்திற்கு எதிராக உள்துறை அமைச்சும் மனித வள அமைச்சும் சட்ட நடவடிக்கையை மேற்கொள்ளவிருக்கின்றன. கடந்த நவம்பர் மாதம் மலேசியவிற்கு கொண்டுவரப்பட்ட அந்த தொழிலாளர்கள் வேலை அல்லது தங்குமிடமின்றி அவர்களது முதலாளியால் கைவிடப்பட்டதைக் கண்டறிந்ததாக உள்துறை அமைச்சர் Saifuddin Nasution Ismail மற்றும் மனித வள அமைச்சர் Steven Sim தெரிவித்தனர்.

அத்தொழிலாளர்களுக்கு தங்குமிடம் மற்றும் உணவு போன்ற அடிப்படை தேவைகளைப் பூர்த்தி செய்யவும் சம்பந்தப்பட்ட முதலாளி தவறிவிட்டார் என்று aifuddin Nasution Ismail மற்றும் மனிதவள அமைச்சர் Steven Sim ஆகியோர் வெளியிட்டக் கூட்டறிக்கையில் தெரிவித்தனர். மீட்கப்பட்ட தொழிலாளர்கள் புத்ராஜெயா குடிநுழைவுத் துறை அலுவலகத்திற்கு ஆவணப் பதிவு நடவடிக்கைக்காக கொண்டுச் செல்லப்பட்டப் பின்னர் இடைக்காலப் பாதுகாப்பு ஆணையைப் பெறுவதற்கு மாஜிஸ்திரேட்டிடம் அழைத்துச் செல்லப்பட்டனர் என அவர்கள் குறிப்பிட்டனர். மேலும் அந்த நிறுவனத்தின் முதலாளி ஆறு குற்றச்சாட்டுக்களை எதிர்நோக்குவார் என்றும் தெரிவிக்கப்பட்டது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!