Latestஉலகம்

மலேசியாவில் 63 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள முதலீடுகள் செய்வதற்கு அமெரிக்க வர்த்தகர்கள் முன்வந்தனர்

சன் பிரான்சிஸ்கோ, நவ 19 – அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவைச் சேர்ந்த முஸ்லீம் வர்த்தகர்கள் மற்றும் தொழிற்நுட்ப நிபுணர்கள் மலேசியாவில் 63 பில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள முதலீடுகளை செய்வதற்கு முன்வந்திருப்பதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்திருக்கிறார். அந்த முதலீட்டாளர்களுடன் நடத்தப்பட்ட சந்திப்பின்போது அவர்கள் இதனை தெரிவித்ததாக தமது முகநூலில் அன்வார் பதிவிட்டுள்ளார். Space X வர்த்தக சந்தை இயக்குனர் ஒமர் குன்பர்கி, Rembrand தலைமை செயல்முறை அதிகாரி ஒமர் தவகோல், Ornovi தலைமை நிர்வாக அதிகாரி ஃபுவாட் ஹாசன் ஆகியோரும் பிரதமருடனான சந்திப்பில் கலந்துகொண்ட தொழில் அதிபர்கள் அல்லது முதலீட்டாளர்களில் அடங்குவர்.

நாட்டின் எதிர்காலத்தின் இலக்கு குறித்த விவரங்களை அறியும் ஆர்வத்தையும் அந்த முதலீட்டாளர்கள் கொண்டிருந்ததாக அன்வார் தெரிவித்தார். கல்வி மற்றும் விண்வெளி தொழில்துறை குறித்தும் அந்த முதலீட்டாளர்கள் ஆர்வம் செலுத்தியதாகவும் அன்வார் கூறினார். அமெரிக்காவிலுள்ள முஸ்லீம்கள் மற்றும் பாலஸ்தீனர்கள் எதிர்நோக்கி வரும் பிரச்சனை குறித்தும் அவர்களுடன் விவாதித்ததோடு பாலஸ்தீன் விவகாரத்தில் மலேசியாவின் உறுதியான நிலைப்பாட்டிற்கு அவர்கள் ஆதரவு தெரிவித்ததாக அன்வார் தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!