Latestமலேசியா

ஈராக் பேட்மிண்டன் குழுவுக்கு தலைவராக மலேசிய பயிற்சியாளர் ரூபன்ராஜ் நியமனம்

கோலாலம்பூர், மார்ச் 19 – மலேசிய பயிற்சியாளரான Roobenraj Velayutham ஈராக் தேசிய ஒலிம்பிக் குழுவில் இணைந்துள்ளதோடு அந்நாட்டின் பேம்மிண்டன் சம்மேனத்தை புதிய தளத்திற்கு கொண்டுச் செல்லும் பொறுப்பை ஏற்றுள்ளார்.

மலேசியாவின் கலப்பு இரட்டையர் குழுவில் இடம்பெற்றிருந்த முன்னாள் விளையாட்டாளருமான Roobenraj தமக்கு இருக்கும் முழுமையான அனுபவத்தை பயன்படுத்தி ஈராக் பேட்மிண்டன் குழுவை புதிய இலக்கிற்கு கொண்டு செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஈராக்கின் அனைத்து வயதுக்குட்பட்ட தேசிய குழுக்களுக்கு Roobenraj புதிய சகாப்தத்தை ஏற்படுத்துவதற்கு வழிக்காட்டியாக அவரது நியமனம் திகழக்கூடும் என கூறப்படுகிறது. ஈராக்கில் பேட்மிண்டன் விளையாட்டின் தரத்தை மேம்படுத்துவதோடு தமது வழிகாட்டுதலில் சிறந்த விளையாட்டு வீரர்களை உருவாக்கும் செயல்முறை திட்டத்தை அவர் அமல்படுத்துவார் என எதிர்பார்ககப்படுக்கிறது.

பயிற்சியாளர் Robenraj வரவை வரவேற்பதாக ஈராக் பேட்மிண்டன் சங்கத்தின் தலைவர் Haval Abdulaziz வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார். Roobenraj தலைமைத்துவத்தின் கீழ் ஈராக் பேட்மிண்டன் குழுவினர் சிறந்த வெற்றியை பதிவு செய்வார்கள் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!