Latestமலேசியா

சந்திரயான் -1 திட்ட இயக்குனர் விஞ்ஞானி மயில்சாமியுடன் அமைச்சர் சிவகுமார் நேரடி சந்திப்பு

கோலாலம்பூர் டிச 3- கோலாலம்பூரில் நடைபெறும் கோபியோ அனைத்துலக விருதளிப்பு விழாவுக்கு இந்தியாவின் புகழ்பெற்ற விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை வருகை புரிந்துள்ளார்.

நேற்றிரவு புத்ரா உல வர்த்தக மையத்தில் இந்த விழாவுக்கு தலைமை தாங்கிய மனிதவள அமைச்சர் வ சிவகுமார், சிறப்பு விருந்தினர் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரையை நேரில் சந்தித்தார்.

சந்திரயான் -1 திட்டத்தின் மூலம் இந்தியாவிற்கும் குறிப்பாக தமிழ் நாட்டு விஞ்ஞானிகளுக்கும் பெருமைசேர்த்தவர் மயில்சாமி அண்ணாதுரை.

தற்போது மயில்சாமி அண்ணாதுரை இந்திய தேசிய கட்டுமான ஆராய்ச்சி மன்றத்தின் தலைவராகவும் தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மன்றத்தின் துணைத் தலைவராகவும் உள்ளார். இந்தப் பொறுப்பை ஏற்கும் முன் இவர் இந்திய விண்வெளி ஆய்வு மையத்தில் இயக்குனராகப் பணிபுரிந்தார். அப்போது முப்பதுக்கும் மேற்பட்ட செயற்கைக் கோள்களை உருவாக்கிய சாதனையிலும் அவர் முக்கிய பங்காற்றினார். இளைஞர்களுக்கு வழிகாட்டும் வகையில், “கையருகே நிலா” என்னும் தலைப்பில் தமது தொடக்க நாட்கள், சந்திரயான் பணி ஆகியவை குறித்து நூல் மயில்சாமி அண்ணாதுரை எழுதியுள்ளார். சந்திரயான்-1 திட்டத்திற்காக மூன்று அனைத்துலக விருதுகளையும் அவர் பெற்றுள்ளார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!