Latestமலேசியா

மைஏர்லைன்ஸுடன் தொடர்புடைய I-Serve link, ரோஜர் இங்கின் 1MDB சொத்து மீதான விசாரணை தொடர்கிறது

கோலாலம்பூர், டிச 3 – மைஏர்லைன்ஸுடன் தொடர்புடைய I-Serve Link மற்றும் ரோஜர் இங் சம்பந்தப்பட்ட 1MDB சொத்துக்கள் தொடர்பில் விசாரணை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாக வர்த்தக குற்றவியல் விசாரணைப் பிரிவின் இயக்குனர் டத்தோஸ்ரீ ரம்லி முகமட் யூசுப் தெரிவித்தார். மின் வர்த்தக நிறுவனமான I- Serve மற்றும் நெருக்கடிக்கு உள்ளான மைஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கும் தொடர்பு இருக்கிறதா என்பது குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருவதாக அவர் கூறினார். மைஏர்லைன்ஸ் நிறுவனத்தின் இணை தோற்றுவிப்பாளர் சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பான விசாரணைக்கு இப்போது உள்ளாகியிருக்கிறார்.

சம்பந்தப்பட்ட நிறுவனங்களில் பணப் பட்டுவடா தொடர்பான விசாரணை முழுமையடைவதற்கு சில காலம் பிடிக்கும் என அவர் கூறினார். பணப்புழக்கம் பிரச்னை ஏற்பட்டதைத் தொடர்ந்து கடந்த அக்டோபர் மாதம் தனது உள்நாடு மற்றும் வட்டார நடவடிக்கைகளை மைஏர்லைன்ஸ் நிறுத்தியது. இதனிடையே 1MDBயில் சம்பந்தப்பட்ட Rரோஜர் இங் அமெரிக்காவில் கொள்முதல் செய்த சொத்துக்களையும் போலீஸ் அடையாளம் கண்டுள்ளதாக ரம்லி முகமட் யூசுப் கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!