கோலாலம்பூர், நவ 20 – முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் ரசாக்கின் சகோதரர் டான்ஸ்ரீ முகமட் நசீர் ரசாக் ஒப்பனை பொருள் நிறுவனத்தின் தோற்றுவிப்பாளர் யாதி ஸைனுடினை திருமணம் செய்து கொண்டார். முகமட் நசீர் ரசாக்கின் திருமண சடங்கு வைபவம் குறித்த புகைப்படத்தை நஜீப்பின் புதல்வர் நோராஷ்மன், இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு தமது வாழ்த்தையும் தெரிவித்துள்ளார். அந்த புகைப்படத்தில் யாதியின் கை விரலில் நசீர் ரசாக் மோதிரம் அணிவிப்பதையும் காண முடிந்தது. அந்த திருமண நிகழ்வில் Capital A நிறுவனத்தின் தலைமை நிர்வாகத் தலைவர் டான் ஸ்ரீ டோனி பெர்னாண்டஸ்சும் கலந்து கொண்டார். தமது நெருங்கிய நண்பரின் திருமண புகைப்படங்களை டான் ஸ்ரீ டோனி பெர்னாண்டஸ்சும் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு தமது வாழ்துக்களை தெரிவித்துக் கொண்டுள்ளார்.
Related Articles
சபா, குவாலா பெஞ்யு கடற்கரையில் ஆயிரக்கணக்கான ஜெல்லிமீன்கள் கரை ஒதுங்கிய சம்பவம் ; அதீத வெப்பமான வானிலை தான் காரணமா?
3 hours ago
ஐந்து லட்சம் ரிங்கிட் இருந்த ‘சூட்கேஸ்’ ; ஒரு வாரம் ஆகியும், இன்னும் உரிமைக் கோர யாரும் முன் வரவில்லை
3 hours ago