Latestமலேசியா

சிலாங்கூர், சீபீல்ட் தோட்டம் மற்றும் சுங்கை சிபுட் ஹீவுட் தமிழ்ப்பள்ளிகள் ; எதிர்வரும் 2024/2025 கல்வித் தவணையில் செயல்படத் தொடங்கும்

கோலாலம்பூர், மார்ச் 6 – இம்மாதம் பத்தாம் தேதி தொடங்கவுள்ள, 2024/2025 ஆம் ஆண்டுக்கான புதிய கல்வித் தவணையில், சிலாங்கூர், சீபீல்ட் தோட்ட தமிழ்ப்பள்ளியும், பேராக், சுங்கை சிபுடிலுள்ள, ஹுவுட் தமிழ்ப் பள்ளியும் செயல்படத் தொடங்குமென, கல்வித் துணையமைச்சர் வோங் கா வோ கூறியுள்ளார்.

2012/2013 அறிவிக்கப்பட்ட சிறப்புத் திட்டத்தின் கீழ், நாட்டில் எட்டு தமிழ்ப் பள்ளிகளை கட்ட அனுமதி வழங்கப்பட்டது.

அதில் ஒரு பள்ளி முழுமையாக கட்டி முடிக்கப்பட்டுள்ள வேளை ; இதர ஏழு பள்ளிகளின் கட்டுமான நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

குறிப்பாக, இவ்வாண்டு பிப்ரவரி 27-ஆம் தேதி, சிலாங்கூர் சீபீட் தோட்ட தமிழ்ப்பள்ளி முழுமையாக கட்டி முடிக்கப்பட்டு கல்வி அமைச்சிடம் ஒப்படைக்கப்பட்டதை வோ சுட்டிக்காட்டினார்.

12 வகுப்பறைகளை கொண்ட அப்பள்ளி, 2024/2025 ஆம் ஆண்டுக்கான புதிய கல்வித் தவணையில் செயல்படத் தொடங்கும்.

பத்து ஆசிரியர்களுடன், 120 மாணவர்கள் அப்பள்ளியில் தங்கள் கல்வியை தொடங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே, ப்ராஸ்டன் தோட்ட தமிழ்ப் பள்ளி, எபிங்ஹாம் தோட்ட தமிழ்ப் பள்ளி, கலும்பாங் தோட்ட தமிழ்ப்பள்ளி, குவாலா டெர்லா தமிழ்ப் பள்ளி, பெர்தாங் தோட்ட தமிழ்ப்பள்ளி, சங்கா தோட்ட தமிழ்ப்பள்ளி, சுங்கை ரெய்லா தோட்ட தமிழ்ப்பள்ளி ஆகியவை இறுதிக்கட்ட கட்டுமானத்தில் உள்ளன.

அவற்றின் வெளிப்புற கட்டுமான பணிகள் நிறைவடைந்து விட்ட போதிலும், CCC செயல்முறை அனுமதிக்காக காத்திருப்பதால், அவை கூடிய செயல்படத் தொடங்குமென வோ சொன்னார்.

இவ்வேளையில், பத்தாவது மற்றும் 11-வது மலேசியத் திட்டத்தின் கீழ் அறிவிக்கப்பட்ட குவாலா பீலா தமிழ்ப் பள்ளியின் கட்டுமானப் பணிகளுக்காக 70 லட்சம் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு வழங்கப்பட்ட வேளை ; அதன் கட்டுமானப் பணிகள் தாமதத்தை எதிர்நோக்கியுள்ள போதும், இறுதிக்கட்டத்தில் இருப்பதாக வோ சொன்னார்.

தமிழ்ப் பள்ளிகள் தொடர்பில், சுங்கை சிப்புட் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.கேசவன் முன் வைத்த கேள்விகளுக்கு வோ இவ்வாறு பதிலளித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!