Latestமலேசியா

பங்குனி உத்திரத் திருவிழா முன்னிட்டு பாதயாத்திரை

மாரான், மார்ச் 23 – நாளை மறுநாள் மாரான், ஸ்ரீ மரத்தாண்டவர் ஆலயத்தின் 93ஆம் ஆண்டு பங்குனி உத்திரத் திருவிழா மிகவும் கோலகலமாக கொண்டாடப்படவுள்ளது.

இதனிடையே, ஒவ்வொரு வருடமும் பங்குனி உத்திர விழாவில் முருகனை தரிசனம் செய்வதற்கு மரத்தாண்டவர் ஆலயத்திற்கு பக்தர்கள் பாதயாத்திரை செல்வது வழக்கம்.

பொதுவாகவே நான்கு நாட்களை உள்ளடக்கிய இந்த பயணத்தில், பல குழுவினர்கள் பாதயாத்திரையை மேற்கொள்வர்.

அந்த வகையில், கடந்த புதன்கிழமை காலை 5 மணிக்கு அதிகாரப்பூர்வமாக பத்து மலை திருத்தலத்திலிருந்து பகாங், மாரானை நோக்கி Super Elite Group-யை பிரதிநிதித்து 150க்கும் மேற்பட்ட, பக்தர்கள் பயணத்தை தொடங்கியுள்ளனர்.
Interview – பக்தர்கள்

206 கிலோமீட்டர் தூரத்தைக் கொண்ட இந்தப் புனித பயணத்தை, பத்துமலை திருத்தலத்தில் தொடங்கிய பக்தர்கள், முதல் நாளில் காராக், ஸ்ரீ பால சுப்பிரமணியர் ஆலயத்தை சென்றடைந்துள்ளனர்.

அதனை தொடர்ந்து, Temerloh மகா மாரியம்மன் ஆலயத்தில் ஓய்வெடுத்து, மூன்றாம் நாள் felda jingka 16 ஸ்ரீ முத்து மாரியம்மன் ஆலயத்துடன் இன்று முருகனின் அருளோடு மாரான், ஸ்ரீ மரத்தாண்டவர் ஆலயத்தை அடைந்துள்ளதாக, பயணத்தில் பங்கெடுத்த பிரபு வணக்கம் மலேசியாவிடம் கூறினார்.
Interview – voice

கிழக்கை நோக்கிய இந்த பாதயாத்திரையில் பங்கேற்ற பக்தர்கள், இன்று முருகனுக்குப் பால் குடம் ஏந்தி நேர்த்திகடன்களையும் நிறைவேற்றியுள்ளனர்.

மார்ச் 24ஆம் தேதிக்குள் ஆயிரக்கணக்கான பாதயாத்திரை பக்தர்கள் மாரான் ஆலயத்தில் ஒன்றுக்கூடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!