Latestமலேசியா

இந்நாட்டு பிரஜையாக இப்போது என் பேத்தி இருந்தாலும் வெளிநாட்டு மாணவருக்கான கட்டணம் செலுத்தி வருகிறேன் – சதாநாதன் வேதனை

கோலாலம்பூர், மார்ச் 25 – தனது 15 வயது பேத்தி Mathumitha Deevakaran னின் குடியுரிமை விண்ணப்பத்திற்கு கடந்த ஜனவரி மாதம் உள்துறை அமைச்சு ஒப்புதல் அளித்த பிறகும், அவரது பள்ளிப்படிப்புக்கான வெளிநாட்டு மாணவர் கட்டணத்தை செலுத்த வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகியிருப்பது குறித்து 73 வயதுடைய Sathanathan விரக்தியடைந்துள்ளார். மதுமீதா தற்போது கெடாவின் அலோஸ்டாரில் SMK Tunku Sofiah இடைநிலைப் பள்ளியில் மூன்றாம் படிவத்தில் பயின்று வருவதாக அவர் தெரிவித்தார். மதுமிதாவின் தாய் இந்தோனேசிய குடியுரிமை பெற்றவர் மற்றும் அவரது தந்தை மலேசிய குடியுரிமை பெற்றவர். இருப்பினும், இதற்கு முன் மதுமிதாவும் அவரது தம்பியும் குடியுரிமையை கொண்டிருக்கவில்லை. அவ்விருவரும் இந்தோனேசிய கடட்பிதழை கொண்டிருந்தனர், பள்ளி பாஸ் அட்டையை கொடுள்ள அந்த இரு பேரப்பிள்ளைகளுக்கும் ஒரு ஆண்டுக்கு தலா 240 ரிங்கிட் கட்டணத்தை செலுத்த வேண்டியிருப்பதாக Sathanathan கூறினார்.

மதுமிதாவிற்கு குடியுரிமைக்கு ஒப்புதல் கிடைத்துவிட்டது, பிறப்பு பத்திரம் எடுப்பதற்காக தேசிய பதிவுத்துறையிடம் கட்டணம் செலுத்தப்பட்ட பிறகும் ஏழு முதல் 8 மாதம்வரை தாங்கள் காத்திருக்க வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்ததாக அவர் கூறினார். தாம் அலோஸ்டாரில் உள்ள உணவகத்தில் உதவியாளராக குறைந்த சம்பளத்தில் வேலை செய்வதால் தமக்கு கல்வி அமைச்சு உதவ வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார். அதோடு மதுமிதாவின் சகோதரனுக்கு இன்னமும் குடியுரிமை கிடைக்கவில்லை என்றும் Sathanathan கூறினார். மதுமிதா எதிர்நோக்கிவரும் பிரச்சனைக்கு விரைவில் தீர்வு காணப்படும் என கல்வி அமைச்சர் Fadhlina Sidek உறுதியளித்திருக்கிறார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!