Latestமலேசியா

மன ஆரோக்கியம் அனைவருக்குமானது; தவறான கண்ணோட்டத்தை நிறுத்துங்கள்

கோலாலம்பூர், டிச 6 – மன ஆரோக்கியம் என்பது உடல் நலத்தை போன்றே மிகவும் முக்கியமானது. ஒருவர் தனது செயல், திறனை அறிந்திருப்பதோடு அன்றாட வாழ்க்கையின் அழுத்தத்தை சமாளிக்கத் தெரிந்து, உற்பத்தி ரீதியாக சமூகத்திற்கும் பங்காற்ற முடியும் என்பது நல்ல மன ஆரோக்கியத்தை குறிக்கிறது.

நம்மீதே நமக்கு ஒரு செளகரியமான சூழலை ஏற்படுத்திக் கொள்ளுதல், மற்றவரோடு பழகுவதில் செளகரியமாக இருத்தல், மேலும், வாழ்க்கைச் சவாலை சமாளிக்கும் ஆற்றலை கொண்டிருத்தல், நல்ல மன ஆரோக்கியம் கொண்டவர்களாக கருதப்படுகிறார்கள்.

சொல்லப்போனால் மன ஆரோக்கியமும் உடல் ஆரோக்கியமும் இரண்டுமே ஒன்றோடு ஒன்று தொடர்புடையவை எனலாம். ஒரு மனிதனின் ஆரோக்கியம் நல்ல மன ஆரோக்கியமின்றி பூர்த்தி அடையாது.

நல்ல மன ஆரோக்கியம் கொண்டவர்களால் மனச்சோர்வை எதிர்கொள்ள முடியும். மற்றவர்களுடன் நட்பு பாராட்டி, குடும்பத்துக்கும் வேலையிலும் நல்ல முறையில் இயங்க முடியும்.

மக்கள் மத்தியில் மனநலம் பற்றிய குறைந்த அறிவும் புரிதலும், இந்த மனநல பிரச்சனை கொண்டவர்கள் உரிய சிகிச்சை பெற முடியாத சூழலை உருவாக்கி விடுகிறது.

எனவே, மன ஆரோக்கியம் குன்றியவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு இது குறித்த புரிதலையும் அறிதலையும் வழங்கி, இப்பிரச்சனைகளுக்கு தொடக்க கட்டத்திலேயே சிகிச்சை வழங்கப்படுவது அவசியமாகும். இதன் வழி, இப்பிரச்சனை வேறு சிக்கலான நிலைக்கு போவதை தவிர்க்க முடியும்.

பிறரின் இந்த மன ஆரோக்கிய பிரச்சனை கொண்டவர்கள் மீதான தவறான கண்ணோட்டம் நாம் எதிகொள்ள வேண்டிய முக்கிய சவாலாகும்.
இந்த தவறான கண்ணோட்டம், பாதிக்கப்பட்டவர்கள் உரிய நேரத்தில் வல்லுனர்களின் உதவி அவர்களுக்கு கிடைப்பதை தாமதமாக்குகிறது.

இது மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு மட்டும் பாதிப்பை ஏற்படுத்துவதில்லை, மாறாக அவர்களின் குடும்ப உறுப்பினர்களையும் பாதிக்கிறது.

மன ஆரோக்கியம் பாதிக்கப்பட்டவர்களை குணப்படுத்த முடியாது எனும் மக்களின் தவறான புரிதல், பாதிக்கப்பட்டவர்கள் உரிய நேரத்தில் வல்லுனர்களின் உதவி அவர்களுக்கு கிடைப்பதை தாமதமாக்குகிறது.

குணமடைந்தவர்கள், வேலை வாய்ப்பு ஆதரவுத் திட்டங்களின் மூலம் வேலை செய்ய முடியும் என்பது பலருக்கு தெரிவதில்லை. குணமடைந்தவர்கள், வேலை வாய்ப்பு ஆதரவுத் திட்டங்களின் மூலம் வேலை செய்ய முடியும் என்பது பலருக்கு தெரிவதில்லை.

மன ஆரோக்கியம் குன்றியவர்களுக்கு தீர்வே கிடையாது என்பது மற்றுமொரு மக்களின் மற்றுமொரு தவறான கண்ணோட்டமாகும். மன ஆரோக்கியம் பிரச்சனை கொண்டவர்கள், அருகாமையில் உள்ள மருத்துவமனை அல்லது கிளினிக்குகளில் சிகிச்சையைப் பெற்றுக் கொள்ளலாம்.

இதை தவிர்த்து, மன ஆரோக்கியம் பாதிக்கப்பட்டவர்களை ‘பைத்தியம்’ என வகைப்படுத்தி அழைப்பதும் மக்களின் அறியாமையைக் காட்டுகிறது. ஒருவரை பைத்தியம் என்று அழைத்து, அந்நபரை சமூகத்திலிருந்து ஒதுக்கி வைப்பது அறியாமையின் உச்சமாகும். அதோடு இந்நோய் பரவக்கூடியது, எப்போதும் ஆவேசமாக நடந்துக் கொள்பவர்கள் இந்த மன ஆரோக்கியம் பாதிக்கப்பட்டவர்கள் என கருதுவதும் மக்களின் தவறான புரிதலாகும்.

மனச்சோர்வு என்பது யாருக்கும் ஏற்படலாம். அதே சமயத்தில் இது தீர்க்கக்கூடியது. அப்படி பட்டவர்கள் பலவீனமானவர்கள் என்று அர்த்தமாகாது. இவர்களுக்கு உதவியும் சிகிச்சையும் தேவைப்படுகிறது.

மன ஆரோக்கியம் பிரச்சனை கொண்டவர்கள், அருகாமையில் உள்ள மருத்துவமனை அல்லது கிளினிக்குகளில் சிகிச்சையைப் பெற்றுக் கொள்ளலாம். அப்படி தகுந்த சிகிச்சைப் பெறும் நபர்கள் இயல்பான வாழ்க்கைக்கு திரும்ப முடியும். அதே சமயத்தில் மருத்துவம் அல்லது மன நல நிபுணரின் ஆலோசனையின்றி சிகிச்சையை நிறுத்தக்கூடாது. இவ்விவகாரத்தில் குடும்ப உறுப்பினர்களின் பங்கு அளப்பறியது.

மன ஆரோக்கியப் பிரச்சனைக் கொண்ட குடும்ப உறுப்பினர்களூக்கோ அல்லது தெரிந்தவர்களுக்கோ உதவ HEAL 15555 தொடர்புக் கொள்ளுங்கள். அல்லது நிபுணர்களின் உதவியை உடனே நாடுங்கள்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!