Latestமலேசியா

AI தொழில்நுட்பம் தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்க புதியச் சட்டம் தேவை – புக்கிட் அமான்

கோலாலம்பூர், ஏப்ரல் 22 – AI அதிநவீனத் தொழில்நுட்பத்தைக் கையாள மலேசியா பிரத்தியேகச் சட்டத்தைக் கொண்டிருக்க வேண்டும்.

AI-யின் தவறான பயன்பாட்டால் Deepfake உள்ளிட்ட அச்சுறுத்தல்கள் அதிகரித்து வருவதால், அந்தப் பிரத்தியேகச் சட்டம் அவசியமாவதாக புக்கிட் அமான் வர்த்தகக் குற்றப்புலனாய்வுத் துறையின் இயக்குனர் Datuk Seri Ramli Mohamed Yoosuf தெரிவித்தார்.

இன்னொருவரின் உடலோடு வேறொருவரின் முகத்தை Superimposing முறையில் ஒட்ட வைத்து தவறான நோக்கங்களுக்காகவும் மோசடிக்காகவும் deepfake பயன்படுத்தப்பட்டு வருவது உலகளவில் பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது.

குறிப்பாக நாட்டின் அரசியல் விவகாரங்கள், வங்கியியல் துறை, கலை-பொழுப்போக்குத் துறையில் அது பாதிப்பை ஏற்படுத்தலாம் என அவர் சொன்னார்.

அதனைக் கையாள உலக நாடுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருவதாக Datuk Seri Ramli கூறினார்.

ஆனால் ஒன்று மட்டும் உறுதி… அதாவது அதனைக் கட்டுப்படுத்த நடப்பில் உள்ள சட்டத் திட்டங்கள் போதாது என்றார் அவர்.

ஐரோப்பிய ஒன்றியத்தை எடுத்துக் கொண்டால், AI-கென அவர்கள் புதியச் சட்டத்தை உருவாக்கி விட்டார்கள்.

எனவே, இங்கும் அத்தகையச் சட்டத்தை இயற்றுவது குறித்து சம்பந்தப்பட்ட தரப்புகள் தீவிரமாக யோசித்து வருவதாக Ramli கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!