Latestமலேசியா

வீட்டுப் பணிப்பெண் கற்பழிப்பு ; ட்ரொனோ முன்னாள் சட்டமன்ற உறுப்பினருக்கு விதிக்கப்பட்ட 2 பிரம்படிகளை நீதிமன்றம் நிலைநிறுத்தியது

புத்ராஜெயா, மார்ச் 1 – ஐந்தாண்டுகளுக்கு முன் தனது வீட்டு பணிப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த ட்ரொனோ (Tronoh) முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பால் யோங் சூ கியோங்கிற்கு விதிக்கப்பட்ட சிறைத் தண்டனையை இன்று மேல்முறையீட்டு நீதிமன்றம் எட்டாண்டுகளாக குறைத்தது.

எனினும், அக்குற்றம் தொடர்பில் அவருக்கு விதிக்கப்பட்ட இரு பிரம்படிகளை மேல்முறையீட்டு நீதிமன்றம் நிலைநிறுத்தியுள்ளது.

தனது வீட்டில் வேலை செய்த 23 வயது இந்தோனேசிய பணிப்பெண்ணை கற்பழித்த குற்றத்திற்காக, 2022-ஆம் ஆண்டு, ஜூலை 27-ஆம் தேதி, பேராக், ஈப்போ உயர் நீதிமன்றம் பால் யோங்கிற்கு, 13 ஆண்டுகள் சிறைத் தண்டனையுடன், இரு பிரம்படிகளை தண்டனையாக விதித்து தீர்ப்பளித்தது.

2019-ஆம் ஆண்டு, ஜூலை ஏழாம் தேதி, இரவு மணி 8.15-க்கும் 9.15-க்கும் இடைப்பட்ட நேரத்தில் பால் யோங் அக்குற்றத்தை புரிந்துள்ளார்.

எனினும், தமக்கு எதிரான அந்த குற்றச்சாட்டு, அப்பொழுது ஆட்சியில் இருந்த பாக்காதான் ஹரப்பான் அரசாங்கத்தை கவிழ்க்க மேற்கொள்ளப்படும் சதி என கூறி பால் ஏங் அந்த தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!