Latestமலேசியா

காஜாங் வட்டாரத்தில் எம்.எம்.ஒயில் சமூக நலன் திட்டங்கள்

காஜாங், மார்ச் 30 – காஜாங் வட்டாரத்திலுள்ள தாமான் எடென் முதியோர் பராமரிப்பு மையத்திற்கும் வசதி குறைவாக உள்ள உள்ளூர் பள்ளிப் பிள்ளைகளுக்கும் நன்மை பயக்கும் பொருட்டு எம்.எம்.ஒயில் நிறுவனம் சமூக நலன் சார்ந்த திட்டங்களை மேற்கொண்டு வருகின்றது.

தன்னுடைய சமூக நல திட்டத்தின் வழி தாமான் எடென் பராமரிப்பு மையத்தில் உள்ள 28 முதியவர்களுக்குத் தங்கும் வசதியுடன் பல்வகை உதவிகளையும் ஆதரவையும் வழங்குவதோடு Pertubuhan Jaringan Kasih Rakyat என்ற பரிவுமிகு அமைப்புடன் இணைந்து அந்த பராமரிப்பு மையத்திற்கு சாயம் பூசுதல், சுத்தப்படுத்துதல் போன்ற தன்னார்வ நடவடிக்கைகளும் செய்து வருகிறது இந்நிறுவனம்.

அதுமட்டுமல்லாமல், தாமான் டேசா ரோஸில் உள்ள 13 பள்ளிப் பிள்ளைகளுக்கு பள்ளி சீருடைகள், பள்ளி புத்தகப்பைகள், காலணிகள் ஆகியவையும் இந்த
சமூக நலத்திட்டத்தின் மூலம் நல்கப்பட்டுள்ளது.

இதனிடையே, இதுபோன்ற கூட்டு முறையான முன்முயற்சித் திட்டங்கள் பரிவுமிக்க சமுதாயத்தை தோற்றுவிப்பதோடு மற்றவர்களின் வாழ்வில் ஒரு திருப்பத்தை கொண்டு வரும் ஒரு முயற்சியாகவும் அமையும் என எம்.எம்.ஒயில் இணை நிறுவனர் குமணன் குறிப்பிட்டுள்ளார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!