Latestமலேசியா

ரத்து செய்யப்பட்ட ஷரியா விதிகளை மீண்டும் அமலாக்கும் தீர்மானத்திற்கு கிளந்தான் சட்மன்றம் ஒப்புதல்

கோத்தா பாரு,மார்ச் 6 – கூட்டரசு நீதிமன்றத்தால் கடந்த மாதம் ரத்து செய்யப்பட்ட 2019ஆம் ஆண்டின் கிளந்தான் ஷரியா குற்றவியல் சட்டத்தின் கீழ் 16 விதிகளை மீண்டும் இயற்றுவதற்கான தீர்மானத்திற்கு கிளந்தான் மாநில சட்டமன்றம் இன்று ஒப்புதல் அளித்துள்ளது. பெரிக்காத்தான் நேசனல் Melor சட்டமன்ற உறுப்பினர் Wan Rohimi Wan Daud lor கொண்டு வந்த தீர்மானம் எதிர்க்கட்சியைச் சேர்ந்த இருவர் உட்பட அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களாலும் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானம் விவாதத்திற்கு ஏற்கப்பட வேண்டிய மூன்று நிபந்தனைகளை பூர்த்தி செய்ததை தாம் கண்டறிந்ததாக கிளந்தான் மாநில சட்டமன்ற சபாநாயகர் Amar Nik Abdullah , கூறினார்.

​​இஸ்லாமிய கொள்கைகளை உள்ளடக்கிய பல பழைய மலாய் சட்டங்கள் 16 ஆம் நூற்றாண்டு முதல் பிரிட்டிஷ் காலனித்துவவாதிகளின் வருகை வரை சமூகத்தை வெற்றிகரமாக மாற்றியமைத்ததாக தீர்மானத்தை முன்மொழியும்போது Wan Rohimi கூறினார். விதிகளை மீண்டும் ஆராய சிறப்பு பணிக்குழு அமைக்கப்படும் என்றும் சட்டமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. கடந்த பிப்ரவரி 9ஆம் தேதியன்று , கிளந்தான் ஷரியா குற்றவியல் சட்டத்தில் உள்ள 16 விதிகள் அரசியலமைப்பிற்கு முரணானது என்ற அடிப்படையில் கூட்டரசு நீதிமன்றம் ரத்து செய்தது. 8க்கு -1 என்ற பெரும்பான்மை முடிவை அறிவித்த தலைமை நீதிபதி Tengku Maimun Tuan Mat , கேள்விக்குரிய குற்றங்கள் கூட்டரசு அரசியலமைப்பு சட்டத்தின் கீழ் உள்ளதால், சட்டத்தின் ஒரு பகுதியாக விதிகளை நிறைவேற்ற மாநில சட்டசபைக்கு அதிகாரம் இல்லை என்று தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!