Latestமலேசியா

பகுதி நேர வேலை வேண்டுமா? ; முதலைகளை குளிர்பாட்ட மாதம் RM1,500 சம்பளம், நீங்கள் தயாரா?

கோலாலம்பூர், ஜனவரி 7 – தனது செல்லப் பிராணிகளைக் குளிர்பாட்ட வேலை வாய்ப்பை அறிவித்துள்ள ஒருவரின் செயல் பலரை அலர வைத்துள்ளது.

வேலை வாய்ப்பு கொடுப்பது நல்லதுதானே என்கிறீர்களா? பலர் அலருவதற்கு காரணம் அவர் வளர்த்து வருவது முதலை என்பதால்.

டிக் டொக் பிரபலமான @khairuljohari27 என்பவர் தனது முதலைகளை மாதம் ஒரு முறை குளிர்பாட்டி அதற்கு பல் துலக்கி விட, பகுதி நேர பணியாளர் ஒருவரை தேடி வருகிறார்.

தனது பதிவில் கைருல் தனது முதலைகளை குளிர்ப்பாட்டும் காணொளி ஒன்றையும் தனது சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளார்.

“அது உங்களை தாக்கிவிடாதா?” என இணைய பயனர் ஒருவர் எழுப்பியுள்ள கேள்விக்கு, “அவை எனது நண்பர்கள். சிறு வயதிலிருந்து நான் அவற்றை பராமரிக்கிறேன். அவை என்னை ஒருபோதும் தாக்காது” என கைருல் பதிலளித்துள்ளார்.

அவ்வப்போது வெளியூருக்கு பயணம் செய்ய வேண்டியுள்ளதாலும், மனைவி கர்ப்பமாக உள்ளதாலும், அந்த முதலைகளை பராமரிக்க தமக்கு உடனடியாக உதவியாளர் ஒருவர் தேவைப்படுவதாகவும் கைருல் கூறியுள்ளார்.

எனினும், “நீங்கள் செய்வதை அனைவராலும் செய்ய முடியாது, அந்த கொடிய விலங்கின் நிஜ தன்மையை என்றுமே மாற்ற முடியாது” என சிலர் தங்கள் அச்சத்தை பதிவிட்டுள்ளனர்.

இதனிடையே, இது எங்குள்ள இடம் போன்ற விவரங்கள் எதுவும் சரியாக தெரிவிக்கப்படாததால், இந்த நபர் உண்மையிலேயே இருக்கின்றாரா, இது வேடிக்கைக்காக வெளியிடப்பட்ட காணொளியா, அல்லது ஏமாற்று வேலையா என சிலரும் தங்களில் கேள்விகளையும் ஐயங்களையும் எழுப்பி வருகின்றனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!