Latestமலேசியா

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவ சுகாதார அமைச்சு வசதிகளை மேம்படுத்தியுள்ளது

கோலாலம்பூர், மார்ச் 1 – புற்றுநோயாளிகளுக்கு, குறிப்பாக குழந்தைகளுக்கு சிறந்த சிகிச்சையை வழங்கும் முயற்சியில், சுகாதார அமைச்சு தற்போதுள்ள சுகாதார வசதிகளை விரிவுபடுத்தி மேம்படுத்தும். புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை உறுதி செய்வதோடு, சிகிச்சை பெறும் குழந்தைகளின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும் இந்த நடவடிக்கை அவசியம் என்று
சுகாதாரத்துறை துணையமைச்சர் Lukanisman Awang Sauni தெரிவித்திருக்கிறார்.
புற்றுநோய் என்பது மலேசியாவில் குறிப்பாக குழந்தைகளை பாதிக்கும் ஒரு நோயாகும். ஒவ்வொரு ஆண்டும் 15 வயதிற்குட்பட்ட 700 க்கும் மேற்பட்ட குழந்தைகள் அல்லது சராசரியாக ஒவ்வொரு நாளும் இரண்டு குழந்தைகள் இந்த நோயால் கண்டறியப்படுகிறார்கள் என்று அவர் கூறினார்.

இருப்பினும் தற்போதுள்ள சிகிச்சையின் முன்னேற்றத்துடன், இந்த குழந்தை நோயாளிகள் குணமடைவதற்கான வாய்ப்பு வியக்கத்தக்க முறையில் அதிகரித்துள்ளது. 70 விழுக்காட்டிற்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். எனவே குழந்தை பருவ புற்றுநோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கான சிறந்த முறையை சுகாதார அமைச்சகம் கண்டுபிடிக்கும் என்று Lukanisman Awang தெரிவித்தார். 200 குழந்தை பருவ புற்றுநோய் நோயாளிகள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் கலந்து கொண்ட தேசிய குழந்தை பருவ புற்றுநோய் நிகழ்சியில் கலந்துகொண்டு உரையாற்றியபோத அவர் இதனை தெரிவித்தார். குழந்தை புற்று நோயாளிகள் மற்ற சாதாரண குழந்தைகளைப் போலவே அன்பு மற்றும் கற்றல் ஆகிய இரண்டிலும் கவனம் செலுத்த வேண்டும். இந்த புற்றுநோய் போராளிகள் புற்றுநோய்க்கு முடிவு அல்ல என்பதை மற்றவர்களுக்கு காட்ட முடியும் என்று நம்பப்படுகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!