Latestஉலகம்

Icon of the Seas உலகின் மிகப் பெரிய சொகுசுக் கப்பல்; தனது முதல் பயணத்தை தொடங்கியது

மியாமி, ஜனவரி 29 – உலகின் மிகப் பெரிய பயணக் கப்பலான Icon of the Seas, அமெரிக்கா, மியாமி துறைமுகத்திலிருந்து தனது முதல் பயணத்தை தொடங்கியுள்ளது.

புளோரிடா மாநிலத்தை சேர்ந்த, ராயல் கரீபியன் கப்பல் நிறுவனத்தால் நிர்மாணிக்கப்பட்ட, ஐகான் ஆப் தி சீஸ் (Icon of the Seas) கப்பல் சுமார் ஆயிரத்து 200 அடி நீளம் கொண்டது.

20 தளங்களை கொண்ட அக்கப்பலில், ஆறு நீர்சறுக்கு தளங்கள், ஏழு நீச்சல் குளங்கள், ஒரு பனிச்சறுக்கு வளையம், ஒரு திரையரங்கம் உட்பட நாற்பதுக்கும் அதிகமான உணவகங்களும், ஓய்வு அறைகளும் உள்ளன.

இயற்கைக்கு பாதகத்தை ஏற்படுத்தாத அதி நவீன தொழில்நுட்பத்தை அந்த கப்பல் உள்ளடக்கி வடிவமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஈராயிரத்து 350 பணியாளர்கள் உட்பட அதிகபட்சமாக ஏழாயிரத்து 600 பயணிகளை ஏற்றிச் செல்லும் ஆற்றல் கொண்ட Icon of the Seas கப்பல், இம்மாதம் 27-ஆம் தேதி, புளோரிடாவிலிருந்து முதல் முறையாக தனது ஏழு நாள் வரலாற்றுப்பூர்வ பயணத்தை தொடங்கியுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!