Latestமலேசியா

குடும்பத்தின் கடன் சுமையில் பெரும் பகுதியை வீட்டுக் கடன் முழுங்கி விடுகிறது

கோலாலம்பூர், மார்ச் 19 – மலேசியாவில் குடும்பத்தின் மொத்த கடன் சுமையில் பெரும்பகுதியை வீடுகளுக்கான கடன் முழுங்கி விடுவதாக நிதியமைச்சு தெரிவித்திருக்கிறது. நாட்டில் குடும்பங்களின் கடன்களின் 60. 5 விழுக்காடு வீடு வாங்கியதற்கான கடனை திரும்ப செலுத்துவதில் அமைந்துவிடுவதாக லாபிஸ் நாடாளுமன்ற உறுப்பினர் Pang Hok Liong எழுப்பிய கேள்விக்கு வழங்கிய எழுத்துபூர்வமான பதிலில் நிதியமைச்சர் தெரிவித்தார். 2018 மற்றும் 2023 ஆம் ஆண்டுக்கிடையே நாட்டிலுள்ள குடும்பங்களின் வீட்டுக் கடன்கள்
1.53 டிரிலியன் ரிங்கிடாக அதிகரித்துள்ளது.

அதைத் தொடர்ந்து 13. 2 விழுக்காடு வாகனக் கடன்கள், தனிநபர் நிதியுதவி தொடர்பான கடன்கள், குடியிருப்பு அல்லாத சொத்து வாங்குதல், கிரெடிட் கார்டு கடன், பத்திரங்கள் மற்றும் பிற நோக்கங்களுக்கான 12. 6 விழுக்காடு கடன்கள் அமைகின்றன. 2018 முதல் 2023 வரையிலான நாட்டின் மொத்த குடும்பக் கடனைக் குறிப்பிடுமாறு நிதியமைச்சிடம் பாங் கேட்டிருந்தார். மொத்தத்தில், 2022 ஆம் ஆண்டிற்கான குடும்பக் கடன் தொகை 1.45 டிரில்லியன் ரிங்கிட் என்றும், 2021 ஆம் ஆண்டில் 1.38 டிரில்லியன் ரிங்கிட்டாகவும் இருந்ததாக நிதியமைச்சர் தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!