Latestமலேசியா

ஜாசினில் டிரெய்லர் – கார் மோதல்; ஓட்டுனர் மரணம்

ஜாசின் , மார்ச் 15 – கனரக வாகனம் ஒன்றில் மோதிய கார் அதன் டிரெய்லர் பகுதியில் புகுந்ததை தொடர்ந்து அக்காரை ஓட்டிய 48 வயதுடைய Ahmad Johari என்ற ஆடவர் மரணம் அடைந்தார். ஜாசின் Lipat kijang தொழில்மய பகுதியில் ஏற்பட்ட அந்த விபத்தில் தொழிற்சாலை பஸ் ஓட்டுனரான Ahmad Johari தலையில் ஏற்பட்ட கடுமையான காயத்தினால் இறந்தார் என ஜாசின் மாவட்ட போலீஸ் தலைவர் துணை சூப்பிரடண்ட் Ahmad Jamil Radzi தெரிவித்தார்.

60 வயதுடைய ஆடவர் ஒருவர் அந்த டிரெய்லர் லோரியை Jalan Besarரிலுள்ள தொழிற்சாலையை நோக்கி இன்று காலை 7,24 அளவில் ஓட்டிச்சென்றபோது இந்த விபத்து நிகழ்ந்தது. சாலை சந்திப்பிலிருந்து அந்த டிரெய்லர் லோரி வெளியேறியபோது புரோட்டோன் காரை ஓட்டிச் சென்ற Ahmad Johari கட்டுப்பாட்டை இழந்து அந்த லோரியின் டிரெய்லர் பகுதியில் மோதியதால் விபத்து நிகழ்ந்த இடத்திலேயே மரணம் அடைந்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!