Latestஉலகம்

நிலவில் தரையிறங்கிய ஆளில்லா அமெரிக்க விண்கலம்

அமெரிக்கா, பிப்ரவரி 23 – அமெரிக்காவைச் சேர்ந்த தனியார் நிறுவனம் அனுப்பிய ஆளில்லா விண்கலம் வியாழக் கிழமை மாலை நிலவில் தரையிறங்கியது.

இதன் வழி நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கிய முதல் தனியார் விண்கலமாகவும் IM-1 திகழ்கிறது.

அந்த Robotic விண்கலம் நிலவில் தரையிறங்கியதும் முதலில் அதனைத் தொடர்புக் கொள்ள இயலவில்லை; பின்னர் மெதுவாக தகவல் பரிமாற்றம் நடைபெற்றதை அந்நிறுவனம் உறுதிச் செய்தது.

நாசாவின் அறிவியல் கருவிகள் மற்றும் ஒரு புதிய சாகசத்தின் கனவைத் தாங்கி கடந்த 15-ஆம் தேதி நவீன தொழில் நுட்பத்துடன் கூடிய ராக்கெட் மூலம், அவ்விண்கலம் ஏவப்பட்டது.

வெறும் ஏழே நாட்களில் விண்கலம் நிலவில் தரையிறங்கிருப்பது விஞ்ஞானிகளை மகிழ்ச்சியடையச் செய்திருக்கிறது.

நாசாவின் நிதியுதவியுடன் பாய்ச்சப்பட்டுள்ள IM-1-ல் நிலவை ஆய்வுச் செய்யும் பல்வகை ரோபோக்கள் இருக்கின்றனவாம்.

நிலவின் தென் துருவத்தில் என்ன மாதிரியான சூழல் நிலவுகிறது என்பதை கண்டறிவதை இந்த விண்கலம் முக்கியப் பணியாகக் கொண்டிருக்கும்.

மனிதர்களை நிலவுக்கு அனுப்பும் முன்னே, அங்கு உஷ்ணமாக இருக்கிறதா அல்லது குளிராக உள்ளதா, தூசி, அழுக்கு போன்றவை இருக்கின்றதா என்பதைக் கண்டறிந்து, IM-1 விஞ்ஞானிகளுக்கு தகவல் அனுப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்கா, கடைசியாக 1972-ஆம் ஆண்டு நிலவில் Apollo 17 விண்கலத்தைத் தரையிறக்கியது.

இப்போது 52 ஆண்டுகள் கழித்து அமெரிக்காவின் தனியார் நிறுவனம் வெற்றிகரமாக விண்கலத்தை நிலவில் தரையிறக்கியுள்ளது.

அமெரிக்கா, சோவியத் குடியரசு, ரஷ்யா, சீனா, இந்தியா, ஜப்பான் ஆகிய நாடுகள் இதுவரை நிலவில் கால்பதித்துள்ளன.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!