Latestமலேசியா

சபா பாப்பாரில் கடுமையான வறட்சி 150,000 மக்கள் பாதிப்பு

கோலாலலம்பூர், மார்ச் 16 – தற்போதைய கடுமையான வறட்சியினால் சபாவில் பாப்பாரில் வட்டாரத்தில் 150,000 குடியிருப்பு வாசிகள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதாக மாவட்ட பேரிடர் நிர்வாக குழுவின் தலைவர் ஃபுவாத் அப்துல்லா தெரிவித்தார்.

இந்த பேரிடரால் 42 கிராமங்கள், ஏழு பள்ளிகள், பல்வேறு வீடமைப்பு பகுதிகள் மற்றும் மூன்று வழிபாட்டு இடங்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அதிகாரியுமான அவர் கூறினார்.

கடந்த சில வாரங்களாக கடுமையான வெப்ப சீதோஷ்ண நிலையினால் பாபார் மாவட்டம் கடுமையான நீர் நெருக்கடிக்கு உள்ளானதைத் தொடர்ந்து புதன்கிழமையன்று அந்த வட்டாரம் வறட்சி பேரிடர் பகுதியாக அறிவிக்கப்பட்டது.

அங்குள்ள குடியிருப்புவாசிகளுக்கு தூய்மையான நீர் வசதி கிடைப்பதை உறுதிப்படுத்துவதற்காக 10,000 லிட்டர் நீர் டாங்கிகளைக் கொண்ட ஏழு லோரிகள் மூலம் மாநில நீர் விநியோகத்துறை தண்ணீர் விநியோகம் செய்யததாக ஃபுவாத் தெரிவித்தார்.

மார்ச் 9ஆம் தேதியிலிருந்து பாபார் மாவட்டத்தில் 9 தீச்சம்பவங்கள் நடந்துள்ளதாக பாபார் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையம் புகார்களை பெற்றுள்ளது.

ஆகக்கடைசியான நேற்று பிற்பகலில் பெங்கலட் பெசாரில் 0.81 ஹெக்டர் பகுதியில் தீப்பற்றியது. மோசமான வறட்சியினால் பாபார் வட்டாரத்தில் விவசாயத்துறையும் பாதிக்கப்பட்டதாக ஃபுவாத் தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!