Latestமலேசியா

8,000 அதிகமான டிக் டொக் உள்ளடக்கங்கள் நீக்கம்

கோலாலம்பூர், பிப்ரவரி 29 – கடந்த ஓராண்டில், விரும்பத்தகாததாக கருதப்பட்ட மொத்தம் எட்டாயிரத்து 71 வகையான டிக் டொக் உள்ளடக்கங்கள் அகற்றப்பட்டுள்ளதாக, தகவல் தொடர்பு அமைச்சர் பாஹ்மி பட்சில் கூறியுள்ளார்.

குறிப்பாக, கடந்தாண்டு ஜனவரி முதலாம் தேதி தொடங்கி, இம்மாதம் 15-ஆம் தேதி வரையில், சமூக ஊடக நிறுவனங்களின் ஒத்துழைப்போடு மொத்தம் எட்டாயிரத்து 71 உள்ளடக்கங்கள் அகற்றப்பட்டுள்ளதை, பாஹ்மி சுட்டிக்காட்டினார்.

அதில், சமூக வழிகாட்டிகளை பின்பற்றாத உள்ளடக்கங்களும் அடங்குமென, மக்களவைக்கு வழங்கிய எழுத்துப்பூர்வ பதிலில் பாஹ்மி குறிப்பிட்டுள்ளார்.

அதற்காக, டிக் டொக் நிறுவனத்தின் ஒத்துழைப்பை பெற, அந்நிறுவனத்துடன், MCMC தொடர்பு பல்லூடக ஆணையம் சில முறை சந்திப்பு நடத்தியுள்ளதாகவும் பாஹ்மி சொன்னார்.

அவை அவதூறான மற்றும் இனத்துவேச அம்சங்களை கொண்டவை. நாட்டின் நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் இருப்பதாக பாஹ்மி கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!